Homeசினிமாசீனாவில் வெளியாக உள்ள 12th Fail திரைப்படம்..!

சீனாவில் வெளியாக உள்ள 12th Fail திரைப்படம்..!

இந்தியாவில் கடந்த ஆண்டு ஆக்டோபர் மாதம் 27 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் 12th Fail. இந்த திரைப்படம் தற்போது சீனாவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விது வினோத் சோப்ரா இயக்கிய படம் தான் 12th Fail. இந்த படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், அன்ஷுமான் புஷ்கர், கீதா அகர்வால், அனந்த் விஜய் ஜோஷி, ஹரிஷ் கண்ணா, சரிதா ஜோஷி மற்றும் விகாஸ் திவ்யகீர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சாந்தனு மொய்த்ரா இசையமைத்திருந்தார்.

ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் சர்மாவின் (Manoj Kumar Sharma) போராட்ட வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் அனுராக் பதக்கின் பிரபலமான நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டும் எடுக்கப்பட்டுள்ளது.

5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 12th Fail Movie நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 69 வது ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் இந்த திரைப்படம் பல விருதுகளை பெற்றது. சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த எடிட்டிங் போன்ற பிரிவுகளில் 12th Fail படம் விருதுகளை பெற்றது.

12th Fail is releasing in China

இந்த நிலையில் இந்த 12th Fail திரைப்படம் சீனாவில் (12th Fail is releasing in China) வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவிற்கு மேலும் பெருமை கிடைக்கும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தயாரிப்பாளராக மாறிய மாஸ் இயக்குனர்..! படத்தின் ஹீரோவாக லாரன்ஸ்..! வேற லெவல் காம்போ..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular