Homeசெய்திகள்16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு..! எந்த மாவட்டத்தில் தெரியுமா?

16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு..! எந்த மாவட்டத்தில் தெரியுமா?

நம் தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசானது பல முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் தான் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளை அரசு செய்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது பழமையான நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசானது பல பகுதிகளில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், குன்னத்தூர் என்னும் பகுதிக்கு அருகில் உள்ள சென்னானூர் என்னும் பகுதியை தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில் தான் தற்போது இந்த இடத்திலிருந்து வெறும் 300 மீ தொலைவில் உள்ள மாந்தோப்பில், இரண்டு பனைமரங்களுக்கு இடையில் ஒரு நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள நடுகல் பற்றிய தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, இந்த நடுகல்லில் வீரன் ஒருவன் வலது கையில் ஈட்டியை ஏந்தியவாறும், இடது கையில் கேடயத்தை தாங்கியவாறும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் கேடயத்தை உள்ள பூ வேலைப்பாடு தெளிவாக உள்ளது என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்களில் ஈட்டியை வீசும் நிலையில் நடுகல் காணப்படுவது மிகவும் அரிதானது என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் இந்த வடிவமைப்பை பார்க்கும் போது, இந்த நடுகல்லானது 16ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும் என்று தெரிய வருகிறது என்றும அவர் கூறியுள்ளார். மேலும் இந்த நடுகல்லை இந்த இடத்திலேயே பாதுகாக்க, தமிழக தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கல்லின் மூலம் ஊரின் தொன்மையை அனைவரும் அறியலாம் எனனனன்றும் அவர் கூறியுள்ளார்.

Nadukal Found in Krishnagiri

மேலும் இந்த ஆய்வின் போது, சதானந்த கிருஷ்ணகுமார், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார், பிரகாஷ், பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: பார்க்லி மாரத்தான்: உலக அளவில் சாதனை படைத்த முதல் பெண்மணி..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular