Homeசெய்திகள்திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு..! 26 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு..! 26 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

காலநிலை மாற்றங்கள் காரணமாக தொடர்ந்து இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற பல விதமான இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து வருடத்திற்கு வருடம் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது இந்தோனேசியாவில் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவு இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் நடைபெற்றுள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக இந்தோனேசியாவின் பெசிசிர் செலாட்டான், படாங் பரிமன் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மேலும் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இப்பகுதியில் மழையால் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலசரிவு (Indonesia Nilasarivu) காரணமாக 14 வீடுகள் மண்ணில் புதையுண்டு உள்ளது. இந்த நிலச்சரிவில் (Indonesia landslide) பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கி 19 பேர் இறந்ததாக தொடக்கத்தில் கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த நிலச்சரிவின் காரணமாக 11 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்பு பணியினர் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Indonesia Nilasarivu

மேலும் இந்த வெள்ள பாதிப்பால் 26 பாலங்கள், 45 மசூதிகள் மற்றும் 25 பள்ளிகள் சேதமடைந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 13 சாலைகள், 279 ஏக்கர் நெற்பயிர்கள் மற்றும் 300 சதுர மீட்டர் தோட்டங்கள் நீரில் மூழ்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம் முடக்கம்..! என்ன காரணம்?
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular