தமிழகத்தை பொருத்தவரையில் முக்கிய நாட்கள், திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளின் போது ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகள் எடுக்கப்படும். அதில் முக்கிய நடிவடிக்கைகளுள் ஒன்று தான் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது. அதே போல தான் தற்போது ஒரு கோவில் திருவிழாவிற்காக மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பபட்டுள்ளது.
இதுப்போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றுதான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 28,29,30 ஆகிய மூன்று தேதிகளில் புது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறவுள்ளது. இதனை அந்த மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி சிறப்பிக்க உள்ளனர்.
இதன் காரணமாக இந்த திருவிழா நிகழ்ச்சியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெற்றுவிட கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 28 முதல் ஏப்ரல் 30 தேதி வரை, மதுரை மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டி பகுதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
மேலும் இந்த விடுமுறை நாட்களில் மதுரை மாவட்டத்திற்குட்பட்ட மதுபான கடையோ, பார்களோ செயல்படுவது தெரிய வரும் வேளையில் அந்த டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: 10th Exam Result 2024: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும்? எதிர்பார்ப்பில் மாணவர்கள்… |