தமிழ் திரையுலகில் பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிப்பெற்ற திரைப்படங்கள் மீண்டும் ரீரிலிஸ் செய்யப்பட்டு வருகிறது. ரீரிலீஸின் போதும் படங்கள் நல்ல வசூலையும் நல்ல வரவேற்ப்பையும் பெறுகிறது. இந்த வரிசையில் தான் வாராவாரம் பல படங்கள் ரீரிலிஸ் அகி வருகிறது. மேலும் இப்போது வெளியாகும புது படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுவது இல்லை. விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி இதன் காரணமாக தான் பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்வதை தற்போது அதிகப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தான் தற்போது சில வருடங்களுக்கு முன்பு ஓடிடியில் ரிலீஸ் ஆகி மக்களால் கொண்டாடப்பட்ட நான்கு திரைப்படங்களை தற்போது தியேட்டரில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இவை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் அதனை முன்னிட்டு இந்த படங்கள் ரீரிலீஸ் ஆகவுள்ளன. அந்த படங்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.
இந்த வரிசையில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் தான் சூரரைப் போற்று. இந்த படத்தில் கதைக்களம் முதல் நடிகர், நடிகைகள் வரை அனைத்தும் இப்படத்தில் மக்களால் ரசிக்கப்பட்டது. இப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி இருந்தார். மேலும் சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்நிலையில் இப்போது இப்படம் திரையில் ரீரிலீஸ் (Soorarai Pottru Movie Re Release) ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதோ 2021-ம் ஆண்டு ஓடிடியில் ரிலீஸ் ஆன சூர்யாவின் முக்கிய படங்களில் ஒன்றான ஜெய் பீம் படமும் மீண்டும் ரிலீஸ் (Jai Bhim Movie Re Release) ஆகவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி இருந்தார். இப்படம் சமூக சீர்திருத்தத்தை உள்ளடக்கிய அற்புத படைப்பாக இருந்தது. இப்படத்தை 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்தது. மேலும் இந்த படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த வரிசையில் மூன்றாவதாக உள்ள திரைப்படம் ஆர் ஜே பாலாஜி மற்றும் நயன்தாராவின் எதார்த்தமான நடிப்பில் உருவாகி கடந்த டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 2020 ஆம் ஆண்டு வெளியான படம் தான் மூக்குத்தி அம்மன். இந்த படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் ஒரு பக்தி படத்தை போல இருந்தாலும் மனித வாழ்க்கையின் எதார்த்தத்தை கூறும் படமா அமைந்தது. இந்த படத்தையும் ரீரிலீஸ் (Mookuthi Amman Movie Re Release) செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இறுதியாக அர்யா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டும் அமேசான் பிரைமில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியானது. இந்த படம் 1970-களில் நடைபெற்ற குத்து சண்டை கலாச்சாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி இருந்தார். மேலும் இப்படத்தில் ஆர்யா, பசுபதி துஷாரா விஜயன், ஜான்விஜய் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தை இப்போது திரையில் ரிலீஸ் (Sarpatta Parambarai Movie Re Release) செய்யவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: ரீ-ரிலீஸ் ஆகும் முன்பே வசூல் சாதனை படைத்த கில்லி… |