Homeசெய்திகள்அரசு ஊழியர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்..! நடந்தது என்ன?

அரசு ஊழியர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்..! நடந்தது என்ன?

மக்களவை தேர்தலின் முதல்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று (19.04.2024) தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இது இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தேர்தலின் போது இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். மேலும் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால் காலை முதலே சில இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை என்ற பிரச்சனை நிலவி வந்தது.

இந்நிலையில் தான் சைதாப்பேட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் அதிக அளவிலான அரசு ஊழியர்கள் வாக்களிக்க முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட தாடண்டர் நகர் பகுதியில் மொத்தம் 5,000 அரசு ஊழியர்கள் இருக்கின்றனர், ஆனால் அவர்களில் சுமார் 500 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை எனவும் புகார் (Election Complaints) தெரிவிக்கப்பட்டள்ளது.

இதன் காரணமாக வாக்களிக்க வந்த 500 அரசு ஊழியர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி உள்ளனர். இவர்கள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிப்புரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து பேசிய அவர்கள் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் எங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியவில்லை என வேதனை தெரிவித்தனர். இதுபோன்ற வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாமல் இருப்பது குறித்த புகார்கள் (Lok Sabha Election Complaints in Tamilnadu) தமிழகத்தின் சில பகுதிகளில் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Lok Sabha Election
இதையும் படியுங்கள்: நம்ம ஓட்டு போட்டு தேர்வு செய்யப்படும் எம்.பி க்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular