நம்மில் பலருக்கு கவிதைகள் எழுதுவது மற்றும் வாசிப்பது மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். இதனை நம்மில் பலர பொழுபோக்காக வைத்து இருப்போம் இன்னும் சிலர் இதனையே தனது தொழிலாக வைத்து இருப்பர். ஆனால் இங்கு ஒருவர் கவிதை எழுதியதற்காக அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி இந்த போர் தொடங்கியது. மேலும் அன்று ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது.
இந்த போரின் முதல் நாட்களில் ரஷ்யப் படைகள் வெற்றி பெற்றாலும், உக்ரேனிய பாதுகாவலர்கள் கெய்வ் மற்றும் பிற முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் முயற்சிகளை முறியடித்தனர் மற்றும் விரைவில் ரஷ்ய நிலைகளில் எதிர் தாக்குதல்களைத் தொடங்கினர்.
கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கிய போர் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே தான் உள்ளது. இதனால் இரு நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த கவிதை எழுதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனைவிதித்து அந்த நாட்டின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உக்ரைன் போர் குறித்து பேசுபவர்களுக்கு தண்டனை அளிக்கப்படும் என்று முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இதன் படி இந்த போருக்கு எதிராக பேசுபவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது இந்த உக்ரைன் போருக்கு எதிராக கவிதை எழுதியவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் லிதுவேனியாவில் வசிக்கும் கவிஞர் அலெக்சாண்டர் பைவ் ஷேவ் (Poet Alexander Byvshie) ஆவார். மேலும் இவர் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு மக்களை தூண்டினார் என்று இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது இவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: CSK vs GT: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்..! அதிரடியாக குறைந்த விலை..! |