Homeசெய்திகள்ரூ.200 கோடியை தானம் செய்த தம்பதியர்கள்..! துறவியான அதிசய நிகழ்வு..!

ரூ.200 கோடியை தானம் செய்த தம்பதியர்கள்..! துறவியான அதிசய நிகழ்வு..!

பணம் தான் முக்கியம் என்று அனைவரும் இந்த காலக்கட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு (Gujarat couple) தம்பதியனர் தாங்கள் சம்பாதித்த ரூ.200 கோடியையும் தானமாக வழங்கி துறவறத்தை மேற்க்கொண்டுள்ளனர். இந்த செயல் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்தியாவின் குஜராத்தில் மாநிலத்தில், ஹிம்மத்நகரை சேர்ந்தவர் தான் பாவேஷ் பண்டாரி. இவர் ஒரு தொழிலதிபர். இவர் சபர்கந்தா மற்றும் அகமதாபாத் ஆகிய இரு நகரங்களிலும் கட்டுமானத் தொழிலில் ஈடுப்பட்டு வந்தார். பெரும் பணக்காரர்களான இவரும், இவரது மனைவியும் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஒரு விழாவில் தங்களின் ரூ.200 கோடியையும் தானமாக (A couple from Gujarat donated 200 crore wealth) வழங்கினார்கள். சொத்துக்களை தானமாக (200 kodi thaanam) வழங்கிவிட்டு துறவறத்தை ஏற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கு 19-வயதில் ஒரு மகளும், 16-வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு துறவறத்தை ஏற்றுக் கொண்டனர். தற்போது இவர்களின் பெற்றோர்கள் பாவேஷ் பண்டாரி மற்றும் அவரது மனைவியும் துறவறத்தை ஏற்றுக்கொண்டனர்.

இவர்கள் தற்போது முக்திக்கான பயணத்தை (Jain ascetics) தொடங்க உள்ளதாகவும், நாடு முழுவதும் வெறுங்காலுடன் நடந்து யாசகம் பெற்று மட்டுமே இவர்கள் உயிர் வாழ்வார்கள் எனவும் தகவல் தெரியவந்துள்ளது. இவர்கள் தங்களுக்கு தேவையான இரண்டு வெள்ளை நிற ஆடைகளும், யாசகம் பெறுவதற்கு ஒரு கிண்ணமும், பூச்சிகளில் இருந்து காப்பாற்றி கொள்வதற்கு வெள்ளை துடைப்பம் ஆகியவற்றை மட்டும் தான் வைத்திருப்பார்கள் என்றும், இதை தவிர மற்ற பொருட்கள் அவர்கள் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

200 kodi thaanam

வருகின்ற ஏப்ரல் 22-ம் தேதி திகதி தம்பதியினர் துறவறத்திற்கான உறுதிமொழியை ஏற்ற பிறகு குடும்ப உறவுகளிடமிருந்து விடைப்பெற்று எந்த ஒரு தொடர்பும் இல்லாமல், துறவற வாழ்வை மேற்கொள்வார்கள் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் படிக்க: மர்மங்கள் நிறைந்த ஆவிகள் இருக்கும் மலை… நள்ளிரவில் நடைபெறும் சிறப்பு பூஜைகள்…
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular