தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கல்விக்கு கொடுக்கப்படும் முக்கியதுவம் என்பது அதிக அளவில் உள்ளது. அதிலும் தமிழகத்தில் அதிக முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு தேவையான உணவு முதல் ஊக்கத்தொகை வரை பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தான் வருகிறது. இந்நிலையில் தான் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகயுள்ளது.
நம் நாட்டின் முக்கியமான அடையாள அட்டைகளில் ஒன்று தான் ஆதார் அட்டை. நாடு முழுவதும் ஆதார் அட்டை இல்லாத மக்களே இல்லை என்னும் நிலை தான் தற்போது உள்ளது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆதார் கார்டை நாம் பிழைகள் ஏதும் இன்றி வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும்.
எனினும் நம்மில் பலருக்கு ஆதார் கார்டில் பிழைகள் இருக்கும் அதனை சரி செய்வதற்காக நாம் பல இடங்களுக்கு சென்று இருப்போம். அதிலும் பள்ளி பயிலும் மாணவர்களுக்கு இது மிகவும் சிரமாக இருந்து இருக்கும். இதற்காக தான் தற்போது தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் (Aadhaar Pathivu Mugam) பள்ளி பயிலும் மாணவர்கள் பள்ளிகளிலேயே ஆதார் பதிவு மற்றும் அதில் செய்யப்படும் அனைத்து விதமான திருத்தங்களையும் செய்துக்கொள்ளலாம்.
இந்த திட்டத்திற்காக (Aadhaar enrollment in schools) தமிழக பள்ளி கல்வித்துறை ஆதார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி பள்ளிகளில் நேரடியாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல் மற்றும் அதில் திருத்தங்களை செய்ய ஏற்ற வகையில் ஆதார் மையங்கள் (Aadhaar enrollment camp in schools) அமைக்கப்படவுள்ளது.
மேலும் இந்த திட்டத்தை எல்காட் நிறுவனத்தின் உதவியுடன் பள்ளிக்கல்வித் துறை செயல்படுத்த உள்ளது. இதற்காக எல்காட் நிறுவனத்தின் அதிகாரிகள் ஆதார் நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இவர்களை கொண்டு பள்ளிகளில் ஆதார் பதிவு மையங்கள் தொடங்கப்படவுள்ளது. இதற்காக 770 ஆதார் பதிவு கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த திட்டமானது ஒவ்வொரு பள்ளியாக சென்று முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இது பள்ளிக்கல்வித் துறையின் மூலம் நடத்தப்படுவதால் இந்த ஆதார் பதிவுகளுக்கு மாணவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது முழுக்க முழுக்க இலவசமாக செயல்படுத்தப்பட உள்ளது என்றும் கூறியுள்ளனர். இந்த முகாம் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரையில் அனைவரும் ஆதார் அட்டையை எளிமையாக பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டமானது இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இதையும் படியுங்கள்: 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில் தரையிறங்கிய முதல் அமெரிக்க விண்கலம்..! |