Homeவேலைவாய்ப்பு செய்திகள்இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) வேலை வேண்டுமா? உங்களுக்காகவே 490 காலியிடங்களை அறிவித்துள்ளது..!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) வேலை வேண்டுமா? உங்களுக்காகவே 490 காலியிடங்களை அறிவித்துள்ளது..!

சிவில் போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் AAI Recruitment 2024 அறிவிப்பில் வெளியாகியுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 490 இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான AAI Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த AAI ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த AAI Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு பதவிக்கும் மாறுபடுகிறது.

Junior Executive (Architecture)விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Junior Executive (Engineering-Civil)விண்ணப்பதாரர்கள் சிவில் இன்ஜினியரிங்/தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Junior Executive (Engineering‐Electrical)விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் / டெக்னாலஜியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Junior Executive (Electronics)விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ்/ டெலிகம்யூனிகேஷன்ஸ்/ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Junior Executive (Information Technology)விண்ணப்பதாரர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ்/ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/ ஐடி/ எலக்ட்ரானிக்ஸ், எம்சிஏ ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Airports Authority of India (AAI) Recruitment 2024-ன் படி ஐந்து பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள Junior Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் (AAI Apply Online) முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான www.aai.aero-க்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த AAI Recruitment Junior Executive பதவிகளுக்கு GATE மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர், அதன் பிறகு Application Verification நடைபெறும் பின்னர் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க SC/ST/PwBD/ மற்றும் பெண்களுக்கு எந்த வித கட்டணமும் இல்லை. இதர பிரிவை சேர்ந்தவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 300 செலுத்து வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAI Junior Executive Recruitment காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  02.04.2024 முதல்  01.05.2024 வரை விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. AAI ஆணையத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடங்கள் 490 பணியிடங்கள் ஆகும்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 27-வயதிற்கு மேல் இருக்கக்கூடாது. மேலும் மத்திய அரசின் வயது தளர்வு சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள AAI Junior Assistant பணிகளுக்கான சம்பளம் 40,000 முதல் 1,40,000 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த AAI Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.

[rank_math_rich_snippet id=”s-931e567e-fbf5-4814-a31c-3c597100f42e”]

இதையும் படியுங்கள்: 10வது படித்தவர்களுக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையில் ரூ .21,700/- முதல் ரூ .81,100/- சம்பளத்துடன் வேலை..! உடனே விண்ணப்பியுங்கள்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular