HomeAutomobilesபைக் பிரியர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு… தள்ளுபடி விலையில் பைக் வாங்கலாம்… எவ்வளவு தெரியுமா?

பைக் பிரியர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு… தள்ளுபடி விலையில் பைக் வாங்கலாம்… எவ்வளவு தெரியுமா?

தற்போது உள்ள காலத்தில் அனைவர் வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு பைக்குகள் உள்ளன. அருகில் இருக்கும் கடைக்கு செல்வது என்றால் கூட பைக்கில் தான் செல்கின்றனர். அந்த அளவிற்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பைக் பயணத்தை விரும்புகின்றனர். அவர்களுக்கு அரிய வாய்ப்பு ஒன்றை அகமதாபாத்தில் உள்ள மின்சார வாகன நிறுவனமான ABZO மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

பெட்ரால் பைக்,ஸ்கூட்டர்களுக்கு ஊடாக தற்போது எலக்ட்ரிக் வாகனங்களும் மக்களார் அதிக அளவில் விரும்பப்படுகின்றன. முன் போல் இல்லாமல் மின்சார வாகனங்கள் ஆட்டோமொபைல் துறையில் வளர்ந்து வருகிறது. அந்த வகையில் மக்களை அதிகம் கவர்வதற்காக அகமதாபாத்தில் உள்ள ABZO மோட்டார்ஸ் என்ற மின்சார வாகன நிறுவனமான ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன் படி ABZO மோட்டார்ஸ் நிறுவனம் நகர சவாரிக்கு ஏற்ற ABZO-VS01 என்ற ஸ்போர்ட்டி எலக்ட்ரிக் க்ரூஸர்க்கு ரூபாய் 50,000 தள்ளுபடியை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் அவர்களின் மாணவ அடையாள அட்டையை (செல்லுபடியாகும்) காண்பித்தால் கூடுதலாக மேலும் 5,000 ரூபாய் தள்ளுபடியாக பெற்று கொள்ளலாம் (ABZO-VS01 Electric Bike Details in Tamil) எனவும் தெரிவித்துள்ளது.

ABZO-VS01 எலக்ட்ரிக் பைக் (ABZO-VS01 Electric Bike)

இந்த ABZO-VS01 Electric Bike ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கிலோ மீட்டருக்கு மேல் செல்லும் என கூறப்படுகிறது. மேலும் ரேபிட் சார்ஜிங் தொழில்நுட்ப முறை 3 மணி நேரத்தில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி முழுமையாக ரீசார்ஜ் ஆகிவிடும்.

ABZO-VS01 Electric Bike

இது 3 ரைடிங் முறைகளை பெற்றுள்ளது. அவை சாதாரண, சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு முறைகள் ஆகும். இந்த ABZO-VS01 எலக்ட்ரிக் பைக் 6 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுகின்றது. அதே நேரத்தில் ABZO-VS01 பைக் 1 கிமீ 0.25 INR என்ற சிறந்த செயல்திறனை பராமரிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பம்சங்கள் கொண்டுள்ள ABZO-VS01 பைக்கின் இந்திய மதிப்பு 1.80 லட்சம் (ABZO-VS01 Electric Bike Price) ஆகும். ஆனால் இந்த பைக்கிற்கு ABZO மோட்டார்ஸ் நிறுவனம் ரூபாய் 50,000 தள்ளுபடியை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: இனிமே இதுதான்..! வெறும் 36,990/- க்கு புதிய எலெக்ட்ரிக் டூவீலர் அறிமுகம்..! அசத்தும் புதிய நிறுவனம்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular