Homeசெய்திகள்திருமண நிச்சயதார்த்தத்தில் மணமகன் மீது ஆசிட் வீச்சு..! இளம்பெண் கைது..!

திருமண நிச்சயதார்த்தத்தில் மணமகன் மீது ஆசிட் வீச்சு..! இளம்பெண் கைது..!

இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரையில் அனைத்து இடங்களிலும் பிரச்சனைகள் அசம்பாவிதங்கள் நடந்து கொண்டே தான் வருகிறது. அதிலும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் எல்லாம் சொல்லவே தேவையில்லை. பல விதமான பிரச்சனைகள் அரங்கேறி கொண்டுதான் வருகிறது. அது போன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது அரங்கேறியுள்ளது. திருமண நிச்சயதார்த்தத்தில் மணமகன் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் பால்லியா மாவட்டத்தில் உள்ள சிகிடாவுனி என்னும் கிராமத்தில் தான் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் 26 வயதான ராகேஷ் பிந்த் என்பவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அப்போது அதே ஊரை சேர்ந்த 24 வயதான லட்சுமி வந்துள்ளார்.

அவர் வரும்போதே ஒரு பையில் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திராவகத்தை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நிச்சயதார்த்த விழாவில் திடீரென அந்த திராவகத்தை எடுத்து மாப்பிள்ளை மீது வீசியுள்ளார் (Acid Attack On Groom). இதனால் ராகேஷின் முகம் மற்றும் உடலின் சில இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

எனவே அங்கிருந்து அவரது உறவினர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் அங்கிருந்த உறவினர்கள் லட்சுமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரும் அந்த இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர்.

Acid Attack On Groom

இந்த விசாரணையில் லட்சுமி, ராகேஷை நீண்ட நாட்களாக விரும்பி வந்ததாகவும், இப்போது அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருந்ததால் விரக்தி அடைந்த லட்சுமி, அவர் மீது ஆசிட் வீசியதும் தெரியவந்ததுள்ளது.

இதையும் படியுங்கள்: நான் யாரையும் அவ்வளவு ஈஸியா நம்ப மாட்டேன்..! விராட்- நவீனா எமோஷனல்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular