HomeசினிமாJeans படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தவர் இவரா? வாய்ப்பை தவறவிட்ட முன்னணி நடிகர்... யார் தெரியுமா?

Jeans படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தவர் இவரா? வாய்ப்பை தவறவிட்ட முன்னணி நடிகர்… யார் தெரியுமா?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளியான Jeans Movie -ல் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்தார். கதாநாயகனாக அப்போது முன்னணி நடிகராக இருந்த பிரசாந்த் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவர் மட்டுமின்றி இவரின் தந்தை வேடத்தில் நடித்த நாசரும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில் இன்றளவும் மக்கள் மனதில் இந்த திரைப்படம் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.

இந்த படத்தில் கதாநாயகனாக (Jeans Movie Hero) நடித்த பிரசாந்த் தேர்வு செய்வதற்கு முன்பாக இயக்குனர் ஷங்கர் வேறெரு முன்னணி நடிகரை தேர்வு செய்து வைத்துள்ளார். உங்களுக்கு அவர் யார் என்று தெரியுமா? அப்போது வளர்ந்து வரும் நடிகர்களில் இருந்து தற்போது முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித்தை தான் ஜீன்ஸ் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஷங்கர் முதன் முதலில் தேர்வு செய்து இருந்தார்.

ஆனால் ஜீன்ஸ் படம் எடுக்க நிறைய நாட்கள் ஆகும் என்பதாலும். அந்த நேரத்தில் அஜித்திடம் கால்சீட் இல்லாத காரணத்திநாடும் அவரால் Jeans Movie -ல் நடிக்க இயலாமல் போனது. அதன் பிறகு இயக்குனர் ஷங்கர் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்க அப்பாஸிடம் கேட்டுள்ளார். ஆனால் அப்பாஸ் 1 வருடத்திற்கு பிஸியாக இருப்பதாக கூறி ஜீன்ஸ் பட வாய்ப்பை வேண்டாம் என கூறிவிட்டார் என கூறப்படுகிறது.

Ajith Kumar

இதன் பிறகே இந்த படத்தில் கதாநாயகனாக பிரசாந்த் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவரிடம் 7 பட வாய்ப்புகள் இருந்துள்ளது. இருப்பினும் அவர் Jeans படத்தில் தான் முதலில் நடித்துள்ளார். அதன் பிறகு இந்த படம் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் அஜித் மற்றும் அப்பாஸ் இணைந்து நடித்தனர். ஜீன்ஸ் பட வாய்ப்புக்கு பிறகு நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் ஷங்கர் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இதுவரை ஏற்படவில்லை.

மேலும் படிக்க: மகிழ்சியில் திரைப்பட ரசிகர்கள்… தமிழ் புத்தாண்டுக்கு ஒளிபரப்பாகும் புதிய படங்கள்…
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular