HomeசினிமாPushpa 2 மட்டுமல்ல... அல்லு அர்ஜுன் கொடுத்த அப்டேட்..!

Pushpa 2 மட்டுமல்ல… அல்லு அர்ஜுன் கொடுத்த அப்டேட்..!

தொலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தயாறாகி வரும் நிலையில். அல்லு அர்ஜுன் மூன்றாம் பாகம் பற்றி ஒரு புதிய தகவலை (Pushpa Movi Update) வெளியிட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி தமிழ், தொலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பான் இந்திய படமாக வெளியான புஷ்பா திரைப்படம் அனைத்து மக்களின் கவனத்தையும் பெற்றது. இந்த படம் ஆனது 350 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்ற தகவல் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.

இந்த புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், அஜய் கோஷ் போனற பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படம் சுமார 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகி வருகிறது என கூறப்படுகிறது. இந்த புஷ்பா இரண்டாம் பாகம் (Pushpa Part 2 Release date) ஆகஸ்டு மாம் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Pushpa Part 3

இந்த நிலையில் பெர்லின் திரைப்பட விழாவில் புஷ்பா திரையிடப்பட உள்ளது. இதற்காக பெர்லின் சென்றுள்ளனர் புஷ்பா படக்குழுவினர். அங்கு அல்லு அர்ஜுன் நீங்கள் நிச்சயமாக Pushpa படத்தின் 3 வது பாகத்தை எதிர்பார்க்கலாம், அதற்கான சுவாரசியமான கதைகள் எங்களிடம் உள்ளது என்று படத்தின் மூன்றாவது பாகம் குறித்து பேசியிருக்கிறார்.

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் (Pushpa Part 2) ஆனது வெளியான முதல் பாகத்தை விட வித்தியாசமானதாக இருக்கிறது. முதல் பாகத்தில் இருக்கும் பன்வர் சிங் கதாபாத்திரம் புஷ்பாவிற்கு பெரும் சவாலான கதாபாத்திரம் என்றும் கூறியுள்ளார் அல்லு அர்ஜுன்.

மேலும் படிக்க: ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட ஜெயம் ரவி..! ஏன் தெரியுமா?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular