Homeசினிமாஜெய்பீம் படத்தில் கண்ணில் மிளகாய் பொடி கொட்டும் சீன்..!மனம் திறந்த மணிகண்டன்..!

ஜெய்பீம் படத்தில் கண்ணில் மிளகாய் பொடி கொட்டும் சீன்..!மனம் திறந்த மணிகண்டன்..!

தமிழ் சினிமாவில் வருடம் தோறும் பல படங்கள் வெளியாகி கொண்டே தான் இருக்கிறது. ஆனால் சில படங்கள் மட்டும் தான் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது போன்ற படங்களில் முக்கிய இடத்தை பிடித்த படம் தான் ஜெய்பீம் (Jai Bhim Movie). இந்த படம் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி இருந்தார். மேலும் இப்படத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லியோமோஸ் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனத்தின் மூலம் அவரே தயாரித்தார். இந்த படத்தில் பல காட்சிகள் (Jai Bhim Movie Secrets) மக்களை கலங்க வைக்கும் முறையில் இருக்கும் அவற்றில் முக்கியமான ஒரு காட்சி தான் மணிகண்டன் கண்ணில் மிளகாய் தூள் காட்சி. இந்த காட்சி ஒரு நொடி மக்களை உறைய வைத்தது என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் தான் தற்போது இந்த காட்சி எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவலை (Actor Manikandan Recent Interview) மணிகன்டன் கூறியுள்ளார்.

இந்த படத்தில் ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் மணிகண்டன் ஜெய்பீம் படத்தில் இறந்து விட்டதா காட்டுவர். அப்போது காவல் அதிகாரிகள் சேர்ந்து அவருக்கு உயிர் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க மிளகாய் பொடி கொட்டுவது போன்ற ஒரு காட்சி இருக்கும். இது குறித்து அவர் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் போலீஸ் என்னை எட்டி மிதிப்பார்கள் அப்போது நான் விழுந்து இறந்துவிடுவேன். நான் இறந்துவிட்டேன் என்பதை கண்டுபிடிக்க கண்ணில் மிளகாய் பொடி தூவுவார்கள்.

Jai Bhim Movie Actor Manikandan

அந்த காட்சிக்காக கண்ணை சிவப்பாக்கி கண்ணீர் வர வைக்க என்ன பயன்படுத்தலாம் என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருந்தோம். அதற்கு கிளிசரின் அல்லது சாக் பவுடர் என எதை பயன்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது தான் கேமராமேன் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் கண்ணை விரிப்பது போல மட்டும் காட்டுகள், ஷாட் எடுப்போம் மீதியை எடிட்டிங்கில் பார்த்துக் கொள்வார்கள் என்று கூலாக சொன்னார் என்று கூறியுள்ளார். மேலும் அந்த ஷாட் அப்படிதான் எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: மீண்டும் ஒரு காதல் கதை..! மௌனராகம் சீரியலால் இணைந்த ஜோடி..! இவங்க நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular