நடிகர் மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜுன் 1 தேதி முதல் மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சியினர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர். தேர்தல் பணிகள் தமிழகத்தில் முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூட்டணி கட்சிகள், தனித்து போட்டியிடும் கட்சிகள் என அனைத்து கட்சியினரும் மாறி மாறி பிரசாரங்கள் (Mansoor Ali Khan Lok Sabha Therthal) செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் அரசியல் கட்சியினர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரங்கள் ஓய்வு பெறுகிறது. கூட்டணி கட்சிகள், தனித்து போட்டியிடும் கட்சிகள் என அனைத்து கட்சியினரும் மாறி மாறி பிரசாரங்கள் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் நடிகரும், பாராளுமன்ற வேட்பாளருமான மன்சூர் அலிகான் தற்போது வேலூரில் தனித்து போட்டியிடுகிறார். அங்கு மக்களுக்கு உதவிகளை செய்வதன் மூலம் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து வந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தற்போது பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் (Mansoor Ali Khan Therthal Pracharam) முடிவடைய உள்ளதால், வெயிலையும் பொருட்படுத்தாமல் இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் மயங்கிய மன்சூர் அலிகானை அவரது தொண்டர்கள் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் (Actor Mansoor Ali Khan hospitalized) சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், தற்போது அவர் எப்படி இருக்கிறார் என்பது பற்றிய தகவல் தெரியவில்லை.