நாடு முழுவதும் நேற்று ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜுன் 1 தேதி முதல் மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் நேற்று ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 18-வது மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பொதுமக்கள் தங்களின் வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்தனர். முன்தாகவே 39-தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள், தமிழக முதல்வர், அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் (Actor Simbu did not Cast a vote) ஆகியோர்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவிற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர சுவரொட்டிகளை வைத்து ஏற்படுத்தி வந்தது. எந்த ஒரு காரணங்களாலும் மக்கள் வாக்கு செலுத்தாமல் போய்விடக்கூடாது என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நேற்று தேர்தல் ஆணையர் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கடந்த மக்களை தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சற்றே குறைந்துள்ளது என தகவல் தெரிவித்தார். மேலும் அதிகாரப்பூர வாக்குப்பதிவு சதவீதத்தை இன்று (ஏப்ரல் 20) காலை 11 மணியளவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
இதில் திரைப்பிரபலங்கள் காலை 7 மணி முதலே வந்து வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள். அந்த வரிசையில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை ஆற்றினார். அதன்பின்னர், ரஜினி, கமல், விஜய், சூர்யா, கார்த்தி, சிசிக்குமார், தனுஷ் அகியோர் தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள்.
ஆனால் இந்நிலையில் பல்வேறு முக்கிய பிரபலங்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வரவில்லை என்று தெரிகிறது. அதிலும் முக்கியமாக அவ்வப்போது அரசியல் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும் சிம்பு வாக்களிக்க (Actor Simbu Political News) வரவில்லை என்று தெரிகிறது. இவர் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளதால் தேர்தலில் வாக்களிக்க வரவில்லை என தெரிய வருகிறது.