தமிழ் சினிமாவில் நிறைய புதிய நடிகர்கள் அவ்வப்போது அறிமுகமாகி கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் பல நகைச்சுவை நடிகர்கள் தங்களின் சினிமா வாழ்க்கையை நகைச்சுவை கதாபாத்திரத்தில் தொடங்கி தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்கள்.
நகைச்சுவை நடிகராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கிய சிவகாத்திகேயன், சந்தானம் ஆகியோர் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் சூரி. இவரின் நகைச்சுவை கொண்ட கதாப்பாத்திரங்கள் இவருக்கு தனி ரசிகர்களை உருவாக்கியது. இதனால் இவர் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.
சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடித்தார். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் அவர் தற்போது கைவசம் மூன்று திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
கொட்டுக்காளி, கருடன், விடுதலை இரண்டாம் பாகம், ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி நடித்து வரும் படம் கருடன். சமீபத்தில் இந்த படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்நிலையில் நடிகர் சூரி ஹீரோவான பிறகு ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் (Actor Soori Salary) குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவர் தற்போது நடிக்கும் ஒரு (Actor Soori Salary for upcoming movies) படத்திற்கு ரூ.8 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தவல் வெளியாகியுள்ளது. இதனால் நடிகர் சூரியன் சம்பளம் ரூ.7 கோடி முதல் ரூ.8 கோடி வரை என தகவல் (Nadigar Soori Sambalam) வெளியாகியுள்ளது.