இன்றைய தலைமுறையினரின் மீம்ஸ்களின் தலைவன் என்று அன்போடு அழைக்கப்படுபவர் தான் காமெடி நடிகர் வடிவேலு. இவர் ஒரு காலத்தில் மற்ற காமெடி நடிகர்களுக்கு டஃப் கொடுத்தவர் என்றே கூறலாம். இவரின் முகப்பாவனைகள், நடிக்கும் விதம் ஆகியவை தான் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார் நடிகர் வடிவேலு.
தமிழ் சினிமாவில் ரெட் கார்ட் பிரச்சனைக்கு பிறகு நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க தொடங்கினார். அவர் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்று தான் கூறவேண்டும். அதன் பிறகு வந்த மாமன்னன் திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாரட்டப்பட்டது. மீண்டும் அவர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் தனது காமெடி பயணத்தை தொடங்கினார். ஆனால் அவரின் நடிப்பு முன்பு போல் இல்லை என்று அனைவராலும் கூறப்பட்டது.
தற்போது நடிகர் வடிவேலு ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இருந்தபோது அவருக்கு சினிமா வாய்ப்புகள் முன்பு போல் இல்லாததால் இவரின் ரசிகர்கள் எப்படி இருந்த மனிதன் இப்போ எப்படி ஆகிவிட்டார் என்று கூறிவருகின்றனர்.
இந்நிலையில் இவர் தற்போது சின்னத்திரையில் தன் காலடியை பதித்துள்ளார் என்று தான் கூறவேண்டும். சன் டிவியில், ஒளிபரப்பாகும் டாப் குக்கு, டூப் குக்கு என்ற (Top Cooku Dupe Cooku) சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சி அனைவரின் எதிர்ப்பார்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் (Actor Vadivelu re-entry) தான் நடிகர் வடிவேலுவை அழைத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சன் டிவி தரப்பு நடிகர் வடிவேலுக்கு அழைப்பு விடுத்ததும் அவர் உடனே சம்மதம் தெரிவித்துள்ளார் என்ற தகவலும் நமக்கு கிடைத்துள்ளது. இவர் இந்த நிகழ்ச்சிக்கு (Actor Vadivelu Re entry In cooking Show) சம்பளமாக ரூ.1 கோடி வரை பெற்றுள்ளார் என்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.