தமிழ் திரையுலகின் முன்னனி நடிகரான தளபதி விஜய் சில நாட்களுக்கு முன்பு சொந்தமாக அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கமானது பல வருடங்களாகவே செயல்பட்டு வரும் ஒரு இயக்கம் ஆகும். இந்த மக்கள் இயக்கம் மூலம் பல வருடங்களாக மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்தது. பேரிடர் காலங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் போன்ற பல விதமான சமூக சேவைகளையும் செய்து வந்தது.
இந்நிலையில் தான் கடந்த (02.02.2024) அன்று விஜய் புதிய அரசியல் கட்சி (Vijay political party) ஒன்றை தொடங்கினார். இந்த கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் (Tamizhaga Vetri kazhagam) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது சுருக்கமாக TVK என அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள நடிகர் விஷாலும் அரசியல் புதிய அரசியல் கட்சியை தொடங்க தயாராகி வருகிறார். இவர் ஏற்கனவே அரசியலில் ஆர்வம் உள்ளவர் என்பது நாம் அறிந்த ஒன்றே. இதற்கு முன்னர் கூட சென்னை ஆர் கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் சில காரணங்களால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்தை விஷால் மக்கள் நல இயக்கம் என்று மாற்றி உள்ளார். மேலும் இந்த இயக்கத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். அதுமட்டுமின்றி படப்பிடிப்புகளின் போது மக்களின் கோரிக்கைகளை கேட்டு அவற்றையும் நிறைவேற்றி வருகிறார். இதனால் இவர் அரசியலுக்கு வரவுள்ளார் (Vishal Arasiyal News) என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு மத்தியில் தான் நடிகர் விஷால் புதிய அரசியல் கட்சி ஒன்றை (vishal politics News) தொடங்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர் தொடங்கவுள்ள கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி தொடங்கினால் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா என்றும் இல்லையெனில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா என்றும் ரசிகர்களிடம் ஆர்வம் அதிகமாகியுள்ளது. இதனை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: அரசியலுக்கு வருவது குறித்து பேசிய KPY Bala..! |