தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகையாக நடிப்பவர் தான் ஆர்த்தி. மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு தமிழ் திரைப்படங்களில் நடிகைகளுக்கு தோழியாகவும் மற்றும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வந்தார்.
ஆர்த்தி மற்றும் இவரது கணவர் சமீபத்தில் பாஜகாவில் இணைந்துள்ளனர். இந்நிலையில் தொலைக்காட்சிக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆர்த்தி நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். அந்த வகையில் நடிகை ஆர்த்தி நிகழ்ச்சி ஒன்றில் (Actress Aarthi Peti) பாஜக தலைவர் அண்ணாமலை அளவிற்கு நடிகர் விஜய்க்கு அரசியல் அறிவு இருக்கிறதா என எனக்கு தெரியவில்லை என கூறினார்.
ஆனால் நடிகர் விஜய் (Actress Aarthi Interview about Vijay )சினிமாவில் தனக்கு இருக்கும் நம்பர் 1 இடத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது மிகவும் தைரியமான பாராட்டக்கூடிய விஷயம் தான் என தெரிவித்தார். இந்நிலையில் மேலும் அவர் பேசும்போது, வருகின்ற 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற முதல்வர் வேட்பாளர் பாஜக தலைவர் அண்ணாமலை தான் என தெரிவித்தார். இந்தியாவின் பிரதமராக வரக்கூடிய ஆற்றல் உடையவர் அண்ணாமலை தான் என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதும் குறிப்பிடத்தக்க அளவில் பாஜக வளர்ந்திருக்கிறது என்றும் தெரிவித்தனர்.