தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் பல வருடங்களாக திரையுலகில் பல படங்களில் நடித்து தன்னுடைய கடின உழைப்பின் மூலம் தற்போது தமிழ் திரையுலகளில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து உள்ளார். இந்நிலையில் தான் தற்போது இவருக்கு சினிமா துறையில் விருது (Nayanthara Recent Award) ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
மனிதனாய் பிறந்த அனைவருக்கும் ஒரு பாராட்டு அல்லது ஒரு அங்கீகாரம் தான் நம்மை உற்சாகப்படுத்தும். அதுபோல தான் திரை கலைஞர்களுக்கு இது போன்ற விருதுகள். இவைதான் அவர்கள் உற்சாகத்துடன் அடுத்த கட்டம் நோக்கி செல்ல தூண்டும்.
இந்நிலையில் தான் இந்த 2024-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஜவான் படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நயன்தாரா (Nayanthara Best Heroine Award) பெற்றார். மேலும் இந்த விருதை அப்படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் ஷாருக்கான் வழங்கினார்.
இந்த ஜவான் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. மேலும் இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் ரூ. 1000 கோடி வரை வசூல் செய்தது. மேலும் இயக்குனர் அட்லீ இந்த திரைப்படம் பாலிவுட்டில் அறிமுகமானார். இப்படத்தில் கதாநாயகனாக ஷாருக் கான் மற்றும் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, ரித்தி தோக்ரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதனை நடிகை நயன்தாரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் அப்பதிவில் நான் தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் விழாவில் ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளேன் என்று பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்: Siren Movie Box Office Collection: வசூலை குவித்து வரும் சைரன்..!எத்தனை கோடி தெரியுமா? |