Homeசினிமாநடிகை பிரியாமணி வாங்கிய புதிய கார்..! விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!

நடிகை பிரியாமணி வாங்கிய புதிய கார்..! விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!

தமிழ் திரையுலகில் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகைகளில் ஒருவர் தான் பிரியாமணி. இவர் தமிழ் திரையுலகில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் அனைத்து படங்களிலும் இவரது கதாபாத்திரங்கள் அதிக அளவிலான மக்கள் பேசும்படி இருந்தது. மக்கள் மத்தியில் இவருக்கு பெரும் புகழ் கிடைத்தது.

நடிகை பிரியாமணி தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஜவான். இப்படத்தில் கூட இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும் இந்த படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகை பிரியாமணி (Priyamani) ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார். மேலும் அதனை தொடர்ந்து ஆர்டிகல் 370 என்ற ஹிந்தி திரைப்படத்திலும் நடித்தார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படமும் பிரியாமணிக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது. இப்படத்தில் இவர் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகை பிரியாமணி (Actress Priyamani) தற்போது புதிய கார் (Actress Priyamani new car) ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் அதனை தனது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று Mercedes-Benz GLC என்ற காரை இவர் வாங்கியுள்ளார். மேலும் இந்த காரின் விலை 75 லட்சம் வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Actress Priyamani

இவர் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வந்தாலும் இவரது சம்பளம் குறைவாக தான் உள்ளது. நடிகை பிரியாமணி தன்னுடைய சம்பளத்தை உயர்த்தாமல் இன்றும் ரூபாய் 80 லட்சம் வரை தான் சம்பளம் வாங்கி வருகிறாராம். எனவே அதற்கு ஏற்றாற்போல அவர் காரை வாங்கியுள்ளார். இந்த செய்தி இவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: இளையராஜா பயோபிக்: படத்தை யார் இயக்க வேண்டும்..! இளையராஜாவின் முடிவு..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular