Homeசினிமாஒரு நாள் முதல்வர் போல ஒரு நாள் பிரதமராக ஆசைப்படும் பிரபல நடிகை..!

ஒரு நாள் முதல்வர் போல ஒரு நாள் பிரதமராக ஆசைப்படும் பிரபல நடிகை..!

ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தில் வரும் ஒரு நாள் முதல்வர் போல நான் ஒரு நாள் பிரதமராக இருக்க வேண்டும் என எனக்கு ஆசை உள்ளதாக நேர்காணல் ஒன்றில் நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் கஃபே என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் Raashii Khanna. அதன் பிறகு தெலுங்கில் பல படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளிள் ஒருவானார். தமிழில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார் ராஷி கண்ணா.

அதன் பிறகு அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 போன்ற பல படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா (Actress Raashii Khanna) தற்போது சுந்தர். சி. இயக்கும் அரண்மனை 4 படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ராஷி கண்ணா தனியார் ஊடகம் ஒன்றில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் அவரின் ஆசை ஒன்றை வெளிப்படுத்தி உள்ளார். ஒரு நல்ல அரசியல் ஆளுமை உள்ள கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று முன் ஒரு முறை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது நல்ல அரசியல் தலைவர் கதைகளில் நடிக்க எனக்கு விருப்பம்.

Actress Raashii Khanna

ஒரு அரசியல் ஆளுமைமிக்க நபரின் வாழ்க்கை கதாபாத்திரத்தில் நடிப்பதின் மூலம் இன்றைய இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவார்கள் என்றால் அப்படிபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது என அவர் கூரியயுள்ளார். குறிப்பாக பிரதமராக இருப்பது பற்றி நான் கோசிக்கிரோன். வாழ்க்கையில் ஒரு நாளாவது நான் பிரதமராக இருக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது என்று ராஷி கண்ணா அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகிய மோகன்லால்..! என்ன காரணம்?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular