தமிழ் திரையுலகின் முக்கிய முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு தனது 62-வது படமான விடாமுயற்சி என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார்.
மேலும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், ரெஜினா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தான் அஜித் அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இது குறித்த அப்டேட் சமீபத்தில் வெளியானது. இப்படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்கிற தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.
இந்த படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் தான் குட் பேட் அக்லி திரைப்படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் தற்போது இந்த படத்தில் மீனா மற்றும் சிம்ரன் இருவரும் இணையவுள்ளதாக தகவல் (Good Bad Ugly Movie Update) வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: Bangaram Movie Update: சமந்தா பிறந்தநாளில் வெளியான புதிய படத்தின் அப்டேட்..! |