தமிழகத்தில் மக்களவை தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சியினர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர். தேர்தல் பணிகள் தமிழகத்தில் முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூட்டணி கட்சிகள், தனித்து போட்டியிடும் கட்சிகள் என அனைத்து கட்சியினரும் மாறி மாறி பிரசாரங்கள் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
வாக்காளர்களை கவரும் விதமாக கட்சியினர்கள் தங்கள் கட்சியின் நடிகர்களை பிரசாரங்களில் கலந்துக்கொள்ள வைப்பதும் தேர்தல் களத்தில் (ADMK Pracharam 2024) ஒரு ஆர்வத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். அந்தவகையில் சமீபத்தில் அதிமுக கட்சி வெற்றி பெற வேண்டி கஞ்சா கருப்பு சமயபுரம் மாரியம் கோவிலில் அக்னி சட்டியுடன், பால்குடம் எடுத்து பிராத்தனை செய்தார்.
தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில் கட்சியினர் தொடர்ந்து பிரசாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிமுக கட்சியை ஆதரித்து கோவையில் பிரசாரம் மேற்கொண்டார் (Actress Vindhya Pracharam) நடிகை விந்தியா. அப்போது பேசிய அவர், வடிவேல் ஒரு திரைப்படத்தில் நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான் என்று கூறுவது போல, நான் தான் தலைவர் என கூறிக்கொண்டு ஒரு ஆட்டுக்குட்டி சுற்றி வருகிறது.
ஆடு எங்கு வேண்டுமானாலும் சிங்கம் வேஷம் போடலாம். ஆனால் திருவிழா முடிந்த பிறகு ஆட்டை பழி கொடுப்பது தான் வழக்கம். அது போல ஆட்டை வளர்த்தவனே பழி கொடுப்பது தான் வரலாறு. இந்த தேர்தல் முடிந்தவுடன் இந்த ஆடு மட்டன் பிரியாணி ஆவது உறுதி என நடிகை விந்தியா (Actress Vindhya Election Campaign) தமிழக பாஜக தலைவரை இவ்வாறாக கூறியுள்ளார்.
மேலும் படிக்க: அதிமுக வெற்றி பெற பால்குடம் எடுத்த காமெடி நடிகர்..! |