இந்த வருடத்திற்கான தமிழக பட்ஜெட் நேற்று (19.02.2024) தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த பட்ஜெட்டில் பல புதிய திட்டங்கள் (Tamil Nadu Budget 2024 Schemes) மற்றும் பழைய திட்டங்களை விரிவுபடுத்துதல் என பல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் தற்போது இந்த வருடத்திற்கான வேளாண் பட்ஜெட் (Velan Budget 2024) இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
இன்று தமிழக சட்டசபையில் 2024- 2025-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ப்படவுள்ளது. இதனை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். மேலும் நேற்றைய தினம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தமிழகத்தின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தனி வேளாண் பட்ஜெட் தாக்கல் (Agricultural Budget Presentation) செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி தமிழ்நாட்டின் தனி வேளாண் பட்ஜெட் முதன் முதலாக தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து, கடந்த 2022-ம் ஆண்டு மற்றும் 2023-ம் ஆண்டுகளிலும் தனியாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வருடத்திற்கான தமிழக பட்ஜெட் (Tamil Nadu Budget 2024) நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட் தாக்கலின் போது பல துணை மானிய கோரிக்கைகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்நிலையில் தான் இன்று தமிழக சட்டசபை கூடுகிறது. இந்த சட்டசபை கூட்டத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் (MRK Panneerselvam) தாக்கல் செய்கிறார்.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட் மற்றும் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் பட்ஜெட் தாக்கல் (Velan Budget Thakkal) ஆகியவற்றை தொடர்ந்து வரும் பிப்ரவரி 20-ம் தேதி இந்த 2 பட்ஜெட்டுகள் மீதான விவாதம் தொடங்கவுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து பிப்ரவரி 22-ம் தேதி விவாதத்திற்கு தங்கம் தென்னரசுவும் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமும் பதில் அளிப்பார்கள்.
இதையும் படியுங்கள்: தமிழ்நாடு பட்ஜெட் 2024: 1,100 கோடி ஒதுக்கீடு..! எதற்கு தெரியுமா? |