இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்று தான் பாரத ரத்னா விருது (Bharat Ratna Award). இந்த விருது வருடம் தோறும் தேசிய சேவை அற்றியவர்களை பாராட்டும் வகையில் கொடுக்கப்படுகிறது. இந்த வகையில் இந்த வருடம் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த விருதினை பெற்றுள்ளார்.
இந்த பாரத ரத்னா விருது வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் உட்பட 5 பேருக்கு இன்று வழங்கப்பட்டது. மேலும் இந்த விருதுவை ஜனாதிபதி முர்மு வழங்கினார்.
இந்த விருது வழங்கும் விழா டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ஜெய்சங்கர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது மகன் பி.வி.பிரபாகர் ராவ் பெற்றுக் கொண்டார். அதேபோல மறைந்த முன்னாள் பிரதமர் சவுத்ரி சரன்சிங்கிற்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது பேரன் ஜெயந்த் சிங் பெற்றுக்கொண்டார்.
அதேபோல் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு (Agricultural Scientist MS Swaminathan) அறிவிக்கப்பட்ட விருதை அவரது மகள் நித்யா ராவ் பெற்றுக்கொண்டார். இவர் தமிழகத்தில் உள்ள கும்பகோணத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய பசுமை புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். நாட்டுக்காக அவர் அளித்த பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்த பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: அமெரிக்கா செல்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்..! |