இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட அனைத்து கட்சிகளும் அவர்களின் வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 6 மாநிலங்களில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக (ADMK Kootani katchigal), பாஜக தலைமையில் கூட்டணி கட்சிகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்தும் என்று நான்கு முனை போட்டி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்த கட்சிகள் அவர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ்நாடு மக்கள் கட்சி திடீரென கூட்டணியில் (ADMK Kootani Murivu) இருந்து விலகுவதாக அறிவிபத்துள்ளது.
திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிவராமன் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கூறினார். இந்த விலகலுக்கு காரணமாக அவர் கூறியதாவது. ADMK கட்சி பாஜகவை எதிர்த்து போட்டியிடுவதால் தான் இந்த கூட்டணியில் இணைந்தோம்.
ஆனால் தற்போது அதிமுக கட்சியின் நடவடிக்கை முழுவதும் திமுக கட்சியை எதிர்ப்பது மட்டுமே (AIADMK Lok Sabha Election 2024) தெரிகிறது. இது குறித்து அதிமுக விடம் கேட்டதற்கு அவர்கள் எங்களை உதாசீனம் செய்தனர். எனவே தமிழ்நாடு மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறினார் அந்த கட்சி பொதுச் செயலாளர்.