Homeசெய்திகள்அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் மாரடைப்பால் மரணம்..!

அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் மாரடைப்பால் மரணம்..!

மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக சார்பில் பல நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் சின்னத்திரை நடிகர் அருள்மணி இவர் கடந்த பத்து நாட்களாக அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இவர் மாரடைப்பு காரணமாக (AIADMK Star Speaker Dies) மரணம் அடைந்தார்.

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் கணச்சித்திர வேடங்களில் 90 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் அருள்மணி. தங்கர் பச்சான் இயக்கிய அழுகி படத்தில் நடித்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து தென்றல், பேல், மருதமலை, வன யுத்தம், சிங்கம் 2, கற்றது தமிழ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது சின்னத்திரையில் பல நாடகங்களில் நடித்து வருகிறார். அழகி, தென்றல் போன்ற பல டிவி தொடர்களில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் பல நாடகங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

மக்களவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் அனைத்துகட்சிகளும் மக்களை கவரும் வகையில் திரை பிரபலங்களை பிரச்சாரத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக கட்சி சார்பில் அருள்மணி -யும் (AIADMK Star Speaker) பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

AIADMK Star Speaker

கடந்த 10 நாட்களாக அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த Arulmani. நேற்று சென்னை உள்ள அவர் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவர் மாலை 4.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

மேலும் படிக்க: முதல்ல டாஸ்மாக் மூடுங்க.. அப்புறம் ஓட்டு போறோம்.. உதயநிதியிடம் பெண்கள் வாக்குவாதம்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular