தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டியர். இந்த படத்தை தொடர்ந்து இவர் கன்னட மொழியில் உத்தரகாண்டா என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரைத்துறையில் (Aishwarya Rajesh in Kannada film) அறிமுகமாகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) காக்கா முட்டை, கனா, தர்மதுரை, வட சென்னை, தி கிரேட் இந்தியன் கிச்சன், வேர்ல்ட் பேமஸ் லவ்வர், ஜோமோண்டே சுவிஷேஷங்கள், வானம் கொட்டட்டும், டக் ஜெகதீஷ் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் காக்கா முட்டை படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
பல வெற்றி படங்களில் நடித்த ஐஸ்வரியா ராஜேஷ் நடிப்பில் கடையாசியாக வெளிவந்த படம் டியர். இந்த படத்தில் ஐஸ்வரியாவுக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஸ் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 11 ஆம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து (Aishwarya Rajesh Next Movie) அவர் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார் என கூறப்பட்டு வந்தது. இதனை தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் உறுதி செய்துள்ளார்.
கன்னட மொழியில் தயாராகி வரும் திரைப்படம் உத்தரகாண்டா. ரோஹித் பதக் இயக்கத்தில் கர்நாடக சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ் குமார் மற்றும் நடராக்ஷசா டாலி தனஞ்சயா இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடிகாய துர்கி எனும் கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிளார்.
இந்த உத்தரகாண்டம் படத்தை கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பாக கார்த்திக் கவுடா மற்றும் கோகி ஜி. ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட மொழியில் அறிமுகம் ஆகிறார்.
Why the well written female characters always goes the non Kannada actresses in Kannada films!?? 😭😭😭 https://t.co/qffKTJCSyQ
— Poorav (@gotttillaa) April 23, 2024