Homeசெய்திகள்விபத்தில் சிக்கிய தல அஜித்.. விடாமுயற்சியின் போது விபரீதம்..!

விபத்தில் சிக்கிய தல அஜித்.. விடாமுயற்சியின் போது விபரீதம்..!

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் தல அஜித் நடித்து கொண்டிருக்கும் படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது ‘லைக்கா நிறுவனம்’ மூலம் தயாரிக்கிறார். மேலும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் பல திரைப்பிரபலங்கள் நடித்து வருகின்றன. அஜித்துடன் இணைந்து பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானதால் இந்த படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் அப்டேட் (Vidamuyarchi new update) குறித்து நடிகர் அஜித்தின் ரசிகர்கள், அவ்வப்போது சமூக வலைதளங்களில் தேடி கொண்டிருப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்தது. இந்நிலையில் விடாமுயற்சியின் அப்டேட்டுகள் அந்த படக்குழுவின் சார்பாகவும் மற்றும் நடிகர் அஜித்துடன் நடிக்கும் சக நடிகர்களின் சார்பாகவும் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்தது. இதனால் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.

மேலும் படம் குறித்த எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருந்தது. விடாமுயற்சி படம் முழுக்க சண்டைக் காட்சிகளும் மற்றும் பல கார் ஜேஷிங் சீன்களும் இருக்கும் என கூறப்பட்டு வந்தது. இதனை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று நடிகர் அஜிதத்தின் ரசிகர்களை பதறவைத்துள்ளது என்றே கூறலாம்.

விடாமுயற்சி படப்பிடிப்பில் (Vidamuyarchi Ajith Accident Video) ஒரு கார் ஜேசிங் சீனில் நடிகர் அஜித் மற்றும் ஆரவ் இருவரும் விபத்தில் சிக்கியுள்ளது போல வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. இதில் நடிகர் அஜித் கார் ஜேசிங் சீனில் கார் ஓட்டுவது போலவும், அருகில் ஆரவ் அமர்ந்திருப்பது போலவும் உள்ளது. இதில் அஜித் வேகமாக கார் ஓட்டுகிறார். இதனால் திடீரென்று கார் கட்டுபாட்டை இழந்து சாலையின் ஓரம் தலைகுப்புற (Ajith Accident Video) கவிழ்கிறது.

நடிகர் அஜித் பதற்றத்துடன் ஆரவ்-விடம் Are you ok.. Are you ok.. என்று கேட்கிறார். திடீரென்று படக்குழு பதற்றத்துடன் அங்கு சென்று இருவரையும் மீட்கிறார்கள். காரில் இருந்த ஏர் பேக்கினால் இருவரும் உயிர் தப்பினார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த காட்சிகள் ரியலாகவே நடந்துள்ளதாக சினிமா துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த வீடியோவை நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உண்மையாவே நடிகர் அஜித் படப்பிடிப்பில் இந்த அளவிற்கு ரிஸ்க் எடுத்துள்ளார். இது போன்று வேறு எந்த நடிகரும் துணிந்து செய்ய மாட்டார்கள் என்று அவரின் (Vidamuyarchi Ajith Vibaththu Video) ரசிகர்களும், சினிமா துறையினரும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: விடாமுயற்சி: புகைப்படக் கலைஞராக மாறிய தல அஜித்..! புதிய அவதாரம்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular