தமிழ் திரையுலகில் முக்கிய நட்சத்திரங்களாக இருப்பவர்கள் தான் தல, தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகவும் உள்ளனர். இவர்கள் படம் திரையரங்குகளில் வெளியாகும் நாள் திருவிழா போல தான் இருக்கும். அவர்களின் படங்கள் தனித்தனியாக வெளியான கூட்டம் களைகட்டும் எனவே இவர்கள் இருவருடைய படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் அது எப்படி இருக்கும் என்று நாங்கள் சொல்ல வேண்டாம்.
இதுபோன்ற ஒரு நாளுக்காக தான் பல ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தான் தற்போது தல மற்றும் தளபதி ஆகியோரின் திரைப்படங்கள் ஒன்றாக ரிலீஸ் (Vijay Ajith Movie Rerelease) ஆக உள்ளது. விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படம் மற்றும் அஜித் நடித்த வாலி ஆகிய இரண்டு படங்களும் மீண்டும் இத்தனை வருடங்கள் கழித்து திரையரங்குகளில் ரீரிலிஸ் (Thala Thalapathy Movie Re release) ஆக உள்ளது.
காதலுக்கு மரியாதை (Kadhalukku Mariyadhai) திரைப்படம் நடிகர் விஜய் நடிப்பில் 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். மேலும் இப்படத்தை இயக்குனர் பாசில் இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ஷாலினி நடித்துள்ளார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
வாலி (Vaali) திரைப்படம் 1999-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியானது. இப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் நடித்து இருந்தார். மேலும் நடிகை ஜோதிகாவும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியான படம் ஆகும். மேலும் இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தான் தற்போது இந்த இரண்டு படங்களும் மீண்டும் வரும் 23-ம் தேதி சென்னையில் உள்ள கமாலா தியேட்டரில் திரையிடப்படவுள்ளது. இந்த படங்களுக்கு டிக்கெட் விலை 69 ரூபாய் ஆகும். மேலும் இந்த இரண்டு படங்களுக்கும் இரண்டு காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. பல வருடங்களுக்கு பின்பு தல மற்றும தளபதியின் படம் மோதிக்கொள்ள உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.
இதையும் படியுங்கள்: தல படத்தில் சிவகார்த்திகேயன்..! வைரலாகும் புகைப்படம்..! |