Akshaya Tritiya 2024: அட்சய திருதியை இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். தமிழ் மாதமான சித்திரை வளர்பிறையில் வரும் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். அட்சயம் (akshaya tritiya meaning in Tamil) என்றால் தேயாது, குறையாது என்று பொருள். இந்த நாளில் நாம் எது செய்தாலும் அது பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் பலரும் தானம் வழங்கி புண்ணியங்களை சேர்ப்பார்கள். ஒரு சிலர் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள்.
முதல் யுகமாக பார்க்கப்படும் கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவிக்கப்பட்ட நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாள் ஜோதிட ரீதியாக இந்து மக்கள் பார்க்கிறார்கள். சொர்க்கத்தில் இருந்து புனித நதியாக கங்கை (பூமிக்கு) இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்ட நாளாக கருதப்படுகிறது. சமணர்களை பொறுத்தவரை சமண தீர்த்தகரங்கர்களுள் ஒருவராகிய ரிசபதேவர் நினைவு நாளாக பார்க்கிறார்கள்.
நாம் இந்த பதிவில் (Akshaya Tritiya in tamil) பற்றி விரிவாக காணலாம். அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும் போன்றவற்றை பற்றி பார்க்கலாம்.
Table of Contents
ஜோதிட ரீதியாக அட்சய திருதியை
ஜோதிடத்தில் அட்சய திருதியை ஒரு முக்கியமான நாளாகும். அதாவது மங்களகரமான நாளாக பார்க்கப்படுகிறது. ஜோதிட ரீதியாக முகூர்த்தம் பார்க்கப்படும் திதிகள் மூன்றாக பிரிக்கப்படுகின்றன. அவை சித்திரை மாத்தில் வளர்பிறையில் வரும் முதல் திதி முதல் தமிழ் மாதத்தின் தொடக்கம், வைகாசி வளர்பிறையில் வரும் மூன்றாம் திதி அட்சய திருதியை, ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை பத்தாம் திதி விஜயதசமியாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த மூன்றாம் திதியில் வரும் அட்சய திருதியை ரோஹிணி நட்சத்திரத்தில் வருவதால் விஷேசமாக பார்க்கப்படுகிறது.
அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்
அட்சய திருதியை (Akshaya Tritiya story in tamil) அன்று அதிகாலை எழுந்து நீராடிவிட்டு, அன்று பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும். ஒரு வாழை இலையை எடுத்து அந்த இலை முழுவதும் பச்சிரிசி நிரப்பி அதன் மேல் ஒரு செம்பு வைத்து கலசம் தயார் செய்ய வேண்டும். அந்த கலசம், அதாவது அந்த செம்பின் மீது மஞ்சள் நூல் சுற்றிலும் கட்டி, மஞ்சள் தடவிய தேங்காயை அதன் மீது வைத்து, அதனை சுற்றியும் மாவிலை வைத்துக்கொள்ள வேண்டும். அதன் அருகில் ஒரு படியில் அல்லது ஒரு சிறிய டம்பளரில் நெல் எடுத்து வைதத்துக்கொள்ள வேண்டும். பக்கத்தில் ஒரு குத்து விளக்கேற்றி அதன் மீது பூ வைத்துக்கொள்ள வேண்டும். லெட்சுமி படம், விநாயகர் படம் எழுந்தருளியது போல் இருந்தால் மிகவும் சிறப்பு. அன்றைய நாளில் என்ன வாங்கி வைத்துள்ளோமோ அதனை அருகில் வைத்து வழிபட வேண்டும். வழிபடும் போது லெட்சுமி தேவி, சிவன் பார்வதி துதி போன்றவற்றை பாடலாம் அல்லது கேட்கலாம்.
பிறகு காலையில் கோயிலுக்கு சென்று வரலாம். அட்சய திருதியை அன்று விநாயகரை வழிபடுவது மிகவும் சிறந்தது. அன்றைய தினம் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டால் லட்சுமி கடாக்ஷம் பெருகும். மாலையில் சிவாலயம் சென்று வரலாம் அல்லது பெருமாள் கோயில் சென்று தரிசனம் பெற்றுவிட்டு, வீடு திரும்பியதும் பூஜை அறையில் விளக்கேற்றி கலசத்தினை வணங்க வேண்டும்.
அட்சய திருதியை விரதம்
அட்சய திருதியை அன்று மற்ற முக்கிய விரத தினங்களுக்கு விரதம் (akshaya tritiya viratham in tamil) இருப்பது போல இருக்கலாம். ஆகாரம் உண்ணாமல் திரவ ஆகாரம் எடுத்துக்கொண்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். ஆரோக்கியத்தில் குறைபாடு உள்ளவர்கள் இதுபோன்று விரதம் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சைவ உணவை சமைத்து விரத்தை முடித்துக்கொள்ளலாம். மாலை கோயிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு விரதத்தை முடித்துக்கொள்வது சிறப்பு.
அட்சய திருதியை பித்ருக்கள் காரியம்
அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்காதவர்கள் அட்சய திருதியை (akshaya tritiya significance in Tamil) அன்று தர்ப்பணம் கொடுக்கலாம். அட்சய திருதியை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறந்த ஒன்று. இந்நாளில் ராமேஸ்வரம், கன்னியாகுமாரி போன்ற கடல்களில் நீராடி விட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.
பிறகு வீட்டில் இருக்கும் பசு மாட்டிற்கு வாழையில் வாழைப்பழம் போன்றவற்றை வைத்து வழிபடுவது அதற்கு சாப்பிடக் கொடுப்பது சிறந்தது.
வாங்க வேண்டிய பொருள்கள்
அட்சய திருதியை அன்று பலரும் தங்க நகைகள் தான் வாங்க வேண்டும் அல்லது வெள்ளி,போன்ற விலையுர்ந்த நகைகள் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த தினத்தில் உப்பு, அரிசி, மஞ்சள், போன்றவற்றையும் வாங்கலாம். இதுபோன்ற பொருட்களை வாங்கி வழிபட்டு வந்தால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
இந்த தினத்தில் புதிய அடை, வாகனங்கள் போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம். இந்நாளில் கல்யாணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை, நிச்சயதார்த்தம், வீடு மனை போடுவது போன்ற நல்ல காரியங்களை இந்நாளில் செய்யலாம்.
மேலும் இந்த தினத்தில் நீங்கள் என்ன செய்தாலூம் அது பத்து மடங்காக பெருகும். எனவே நல்லதை செய்து அதனை 10 மடங்காக பெறுங்கள்.
தானம்
அட்சய திருதியை அன்று தானம் செய்வது (what to do on akshaya tritiya in Tamil) நாம் வாங்கும் பொருட்களை வடவும் மிகவும் சிறந்த ஒன்று. அன்றைய தினம் தானம் செய்வதால் நாம் புண்ணியங்களை சேர்க்கிறோம். தங்க நகைகள் வாங்குவது ஒரு பக்கம் இருந்தாலும், இயலாதவர்களுக்கு தானங்களை வழங்குவது சிறந்த ஒன்று.
- தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று கூறுவார்கள். அன்றைய தினம் இயலாதவர்களுக்கு ஒருவேளை உணவு வாங்கி கொடுக்கலாம்.
- வஸ்திர தானம் செய்யலாம்.
- படிக்கும் குழந்தைகளுக்கு புத்தகம், பென்சில் போன்ற தானம் செய்யலாம்.
- மாற்றுதிறனாளிகள், வயதானவர்களுக்கு அவர்களின் தேவைகளை அறிந்து அதுபோல தனானம் செய்து வந்தால் புண்ணியம் கிடைக்கும்.
- ஏழைகளுக்கு பசு தானம் செய்யலாம்
- நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்வது சிறந்தது.
- தாகம் தீர்க்கும்படி நீர்,மோர், பானகம் கொடுத்தால் புண்ணியம்
- நீர் நிறைந்த குடத்தை தானமாக வழங்கலாம்
- அரிசி,கோதுமை, போன்ற தானியங்களை ஏழைகளுக்கு கொடுக்கலாம்.
- வாயில்லா ஜீவராசிகள், கால்நடை, எறும்பு, காக்கை போன்றவற்றிற்கு உணவு கொடுக்கலாம்.
- தயிர் சாதம் ஏழைகளுக்குத் தருவது 11 தலைமுறைக்கு குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும் என்பது நம்பிக்கை.
- இதுபோனற உதவிகளை செய்வது இறைவனுக்கே நேரடியாக செய்வதை குறிக்கும். இதனால் உங்களுக்கு புண்ணிய பலன்கள் இந்நாளில் வந்து சேரும் என்பது ஐதீகம்.
அட்சய திருதியை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் – Akshaya Tritiya Story in Tamil
- முதல் யுகமாக பார்க்கப்படும் கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவிக்கப்பட்ட நாளாக பார்க்கப்படுகிறது.
- சொர்க்கத்தில் இருந்து புனித நிதியாக கங்கை (பூமிக்கு) இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்ட நாளாக கருதப்படுகிறது.
- சமண தீர்த்தகரங்கர்களுள் ஒருவராகிய ரிசபதேவர் நினைவு நாளாக பார்க்கிறரார்கள்.
- காசியில் சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்ஷாடன மூர்த்தியாக யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
- மூன்றாம் திதியில் வரும் அட்சய திருதியை ரோஹிணி நட்சத்திரத்தில் வருவதால் விஷேசமாக பார்க்கப்படுகிறது
- பார்வதி தேவி காசியில் அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள் என்பது ஐதீகம்.
- மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றது இந்நாளில் தான்.
- குபேரன், மஹாலட்சுமியைத் துதித்து நிதி கலசங்களை பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
- பெருமாளின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்து அட்சய திருதியை தினத்தன்றுதான்.
- வனவாசத்தில் பஞ்ச பாண்டவர்கள் தவம் இருந்து சூரிய பகவானிடம் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
- திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர் ஆடையை தந்து அருளியது நிகழ்ந்தது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
- அட்சய திருதியை அன்று தங்கம், வெள்ளி வாங்க இயலாதவர்கள் உப்பு, மஞ்சள், அரிசி போன்றவற்றை வாங்கி வழிபட்டால் போதுமானது. லட்சுமி கடாஷம் கிடைக்கும்.
- சமணர்கள் அட்சய திருதியை அட்சய தீஜ் என்று அழைக்கிறார்கள்.
- சில சமணர்கள் இவ்விழாவை வர்சி தப எனும் பெயரால் குறிப்பிடுகின்றனர்
- திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அட்சய திருதியை அன்று வட மாநிலங்களில் திருமணங்கள் நடத்தப்படுகிறது.
- அட்சஷய திருதியை நாளன்றே வியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.
- இந்த நாள் ஜாட் எனப்படும் விவசாய சமூகத்திற்கும் மிக மங்களகரமான நாளாகும். விடியற்காலையில் ஜாட் குடும்பத்தின் ஓர் ஆண் நிலத்திற்கு மண்வெட்டியுடன் செல்வார். இவர்கள் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் விவசாயிகளை ஜாட் என அழைக்கப்படுகிறார்கள்.
- புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் வட இந்தியர்கள் தொடங்குவார்கள்.
- வங்காளத்தில், அட்சய திருதியை நாளில், “அல்கதா” எனும் விழா கொண்டாடப்படுகிறது. இதன் சிறப்பு விநாயகர் மற்றும் லட்சுமிதேவி வணங்குவதாகும்.
- அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிகச்சிறந்தது.
- ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தது இந்நாளில் தான்.
- அட்சய திருதியை தினத்தன்று பித்ரு தர்ப்பணம் கொடுக்கலாம்.
- அட்சய திருதியை அன்று கங்கையில் நீராடுவது மிகவும் புனிதமாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Chitra Pournami: சித்ரா பௌர்ணமியின் சிறப்புகள்..! |
ஆலய வழிபாடு
- அட்சய திருதியை நாளில், கும்பகோணம் பெரிய தெருவில் பதினாறு பெருமாள்களும் ஒருசேர தரும் தரிசனம் காணுதல் மிகச்சறப்பு வாய்ந்ததாக பார்க்ப்படுகிறது.
- அட்சய திருதியை நாளில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் பெருமாள் தரிசனம் செய்வது சிறந்தது.
- அட்சய திருதியை நாளில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள முக்கூடல் தீர்த்தத்தில் நீராடுதல்.
- அட்சய திருதியை நாளில், சேலம் மாவட்டம், எட்டிக்குட்டைமேடில் உள்ள பதினாறு லட்சுமி கொண்ட ஸ்ரீ ஸ்ரீ அதிர்ஷ்டலட்சுமி திருகோவிலில் சிறப்பு பூஜை, சிறப்பு அன்னதானம், திருக்கோயில் வரும் சுமங்கலி பெண்களுக்கு மங்கல பொருள் வழங்கப்படும்.
- அட்சய திருதியை நாளில், திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூரில் உள்ள மகாலட்சுமி பிரதிஷ்டை செய்த திருக்காமீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தல் சிறந்தது.
Akshaya Tritiya 2024 – FAQS
1. அட்சய திருதியையின் முக்கியத்துவம் என்ன?
விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக அறியப்படும் பரசுராமரின் பிறந்தநாளாக அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. மகாபாரதத்தின் ஆசிரியரான வியாச முனிவர், விநாயகப் பெருமானுக்கு இதிகாசக் கதையைச் சொல்லத் தொடங்கிய என்பது ஐதீகம்.
2. Why is Akshaya Tritiya Celebrated? ஏன் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது?
இந்த பூமியில் உள்ள தீமைகளை அழிக்க விஷ்ணு பரசுராமராக பூமியில் மறு அவதாரம் எடுத்ததாக கூறப்படுகிறது.
3. Akshaya Tritiya 2024 Date and Time? 2024 ஆம் ஆண்டில் அட்சய திருதியை எப்போது?
வெள்ளி, 10 மே, 2024.
4. அட்சய திருதியைக்கான அறிவியல் காரணம் என்ன? What is the scientific reason for Akshaya Tritiya?
இந்த நாளில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான வேறுபாடு 24 முதல் 36 டிகிரி வரை இருக்கும். அங்கு சந்திரன் சூரியனுக்கு முன்னால் இருக்கும். இந்த நாளில் சூரியனும் சந்திரனும் தங்கள் கிரகங்களில் சிறப்பாகவும், உக்கிரமாகவும் இருக்கின்றன.
5. Which God is Akshaya Tritiya? அட்சய திருதியை எந்த கடவுளுக்கு உகந்தது?
பெருமாள் கடவுளின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாக இந்துக்களால் அட்சய திருதியை நம்பப்படுகிறது. வைணவ ஆலயங்களில் இவர் போற்றப்படுகிறார். பரசுராமரின் நினைவாக இதை கடைப்பிடிக்கிறார்கள். இந்த விழாவை பரசுராம ஜெயந்தி என்று குறிப்பிடுகிறார்கள்.