இந்து சாஸ்திரப்படி (அமாவாசை 2024) ஒரு முக்கியமான நாளாக கருதப்படுகிறது. அறிவியல் ரீதியாக பார்த்தால் அமாவாசையை மறைமதி என்று சொல்வார்கள். அதாவது சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் சந்திப்பதாகும். ஆங்கிலத்தில் இதனை New Moon என்றழைப்பார்கள். ஆன்மீக ரீதியாக அமாவாசை என்பது ஒரு முக்கியமான நாளாகும்.
அமாவாசை அன்று அதிகாலை எழுந்து நீராடுதல் மற்றும் விரதம் (Amavasai viratham 2024) இருப்பது நம் முன்னோர்களை மகிழ்ச்சியடைய செய்யும் என்பது ஐதீகம். அமாவாசை நாளன்று விரதம் இருந்து அன்னதானம் வழங்குவது ஒரு மங்களகராமான செயலாக இருந்தாலும், நம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். இதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி, செல்வம் நிறையும்.
ஒருவர் அமாவாசை அன்று விரதம் இருந்து பிறருக்கும் அன்னாதானம் வழங்கி வந்தார்கள் என்றால் அவரின் பித்ரு தோஷத்தில் இருந்து விடுபடுவார். 2024 ஆம் ஆண்டிற்கான அமாவாசை (Amavasai Date in Tamil 2024) தேதிகள் மற்றும் விரத நேரங்களை நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
ஆங்கில மாதம் | ஆங்கில தேதி, கிழமை | தமிழ் மாதம், தேதி | விரத நேரம் |
ஜனவரி | 11 வியாழன் | மார்கழி 26 | ஜனவரி 10-ஆம் தேதி இரவு 8.05-க்கு தொடங்கி ஜனவரி11-ம் தேதி மாலை 6.31 வரை |
பிப்ரவரி | 09 வெள்ளி | தை 26 | காலை 7.53 முதல் பிப்ரவரி 10 ம் தேதி காலை 4.34 வரை |
மார்ச் | 10 ஞாயிறு | மாசி 27 | மார்ச் 9 மாலை 06.01 முதல் மார்ச் 10 தேதி மாலை 03.39 வரை |
ஏப்ரல் | 08 திங்கள் | பங்குனி 26 | அதிகாலை 02.55 முதல் ஏப்ரல் 9 அதிகாலை 12.36 வரை |
மே | 07 செவ்வாய் | சித்திரை 24 | காலை 11.18 முதல் மறுநாள் மே 08 தேதி காலை 09.19 வரை |
ஜூன் | 06 வியாழன் | வைகாசி 24 | ஜூன் 05 ம் தேதி இரவு 7.56 முதல் ஜூன் 06 மாலை 6.40 வரை |
ஜூலை | 05 வெள்ளி | ஆனி 21 | காலை 4.56 முதல் ஜூலை 06 காலை 5 மணி வரை |
ஆகஸ்ட் | 04 ஞாயிறு | ஆடி 19 | ஆகஸ்ட் 03 ஆம் தேதி மாலை 4.56 முதல் ஆகஸ்ட் 04 தேதி மாலை 5.32 வரை |
செப்டம்பர் | 02 திங்கள் | ஆவணி 17 | காலை 6.33 முதல் மறுநாள் செப்டம்பர் 03 ம் தேதி காலை 7.59 வரை |
அக்டோபர் | 02 புதன் | புரட்டாசி 16 | அக்டோபர் 01 இரவு 10.35 முதல் அக்டோபர் 03ம் தேதி அதிகாலை 12.34 வரை |
நவம்பர் | 01 வெள்ளி | ஐப்பசி 15 | அக்டோபர் 31ம் தேதி மாலை 04.29 முதல் நவம்பர் 01 ம் தேதி மாலை 6.25 வரை |
30 சனி | கார்த்திகை 15 | காலை 11.04 முதல் டிசம்பர் 1ம் தேதி பகல் 12.19 வரை | |
டிசம்பர் | 30 திங்கள் | மார்கழி 15 | காலை 4.44 முதல் டிசம்பர்31 காலை 5.03 வரை |