நம் அனைவராலும் சட்டமேதை என அழைக்கப்படுபவர் தான் டாக்டர் அம்பேத்கர். இவர் மத்திய பிரதேசத்தில் உள்ள மாவு என்னும் ஊரில் 1891-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ஆம் பிறந்துள்ளார். இவரது தந்தை பெயர் ராம்ஜி மாலோஜி சக்பால் மற்றும் தாயின் பெயர் பீமா பாய் ஆகும். இவருக்கு பெற்றோர்களால் வைக்கப்பட்ட பெயர் பீமாராவ் ராம்ஜி.
இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்று சிறுவயது முதலே பல விதமான கஷ்டங்களை அனுபவித்துள்ளார். இவர் 1900-ம் ஆண்டு சாத்தாராவில் ஒரு பள்ளியில் தனது கல்வியை தொடர்ந்தார். ஆனால் அதன் பிறகு தனது மக்களின் முன்னேற்றத்திற்கு நிறைய பாடுபட்டுள்ளார். மேலும் நம் நாட்டின் முன்னேற்றப்பாதைக்கு முக்கிய காரணமாக இருப்பது அரசியல் சட்டங்கள் தான், அதனை உறுவாக்கியவர் இவர் தான்.
தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய பல தலைவர்களில் இவரும் முக்கியமான தலைவர் ஆவார். அம்பேத்கர் தீண்டாமை என்னும் கொடிய நோயை ஒழித்து அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று நினைத்தார். மேலும் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தன்னம்பிக்கைகாகவும் பல பென்மொழிகளை (Ambedkar Quotes in Tamil) கூறியுள்ளார். அவற்றில் சிலவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.
Table of Contents
அம்பேத்கர் மேற்கோள்கள் (Powerful Ambedkar Quotes)
- சாதி எனும் கீழ்த்தனத்தினால் தான் பெரும்பாலான மக்கள் மனிதத்தன்மை இல்லாமல் வாழ்கிறார்கள்.
அம்பேத்கரின் கல்வி பற்றிய மேற்கோள்கள் (Ambedkar Quotes on Education)
- நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது.. உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை
அம்பேத்கர் மேற்கோள்கள் (Ambedkar Quotes in Tamil)
- நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமை இல்லை.
டாக்டர் அம்பேத்கர் மேற்கோள்கள் (DR Ambedkar Quotes)
- சாதிகள் அனைத்துமே தேசவிரோத சக்திகள்.
தமிழில் அம்பேத்கர் மேற்கோள்கள் (Ambedkar Quotes Tamil)
- கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கையை விட ஏழைகளுக்கு கொடுக்கும் கல்வி மேலானது.
ஊக்கமளிக்கும் அம்பேத்கர் மேற்கோள்கள் (Motivational Ambedkar Quotes)
- ஜாதியை ஒழிக்க நினைப்பவர்கள் ஜாதித் தலைவராக மாற்றப்படுவது மாறாதவரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை.
பீம்ராவ் அம்பேத்கர் மேற்கோள்கள் (Bhimrao Ambedkar Quotes)
- சிந்தனை விடுதலையே அனைத்து விடுதலைக்கும் அடிப்படையானது.
அம்பேத்கரின் பிரபலமான மேற்கோள்கள் (Ambedkar Famous Quotes)
- ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுயமரியாதை. இதை இழந்து வாழ்வது தான் பெரிய அவமானம்.
அம்பேத்கரின் சிறந்த மேற்கோள்கள் (Best Quotes of Ambedkar)
- ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
அம்பேத்கரின் பிரபலமான மேற்கோள்கள் (Famous Quotes of Ambedkar)
- பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன்
அம்பேத்கர் அரசியலமைப்பு மேற்கோள்கள் (Ambedkar on Constitution Quotes)
- அரசியலமைப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை நான் கண்டால், அதை முதலில் எரிப்பேன்
Quotes on Ambedkar Jayanti
- சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை போதிக்கும் மதத்தை நான் விரும்புகிறேன்.
BR அம்பேத்கர் மேற்கோள்கள் (BR Ambedkar Quotes)
அறிவை தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும்
இதையும் படியுங்கள்: Constitution of India in Tamil: இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றிய தகவல்கள்..! |
Ambedkar Tamil Quotes
- மற்றவர்களின் எல்லா தேவைகளையும் நிவர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்த பெயர் ஒருபோதும் தேவையில்லை.
- வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கவலை வேண்டாம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கடமையை செய்வோம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது எதிரியும் நம்மை மதிக்க தொடங்குவான்.
- எவனொருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் விருப்பபடி செயல்படாமல். அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே சுதந்திர மனிதன்.
- அறிவு நன்னடத்தை சுயமரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள் இவற்றை தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
- உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளை பொறுத்து தான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது.
Ambedkar Birthday Quotes in Tamil
- தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கின்றது.
- சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய இன்பங்களை தியாகம் செய்து பாடுபடுங்கள் குறிக்கோளை எட்டும் வரை தீ போல் சுடும் கடும் துன்பங்களை ஏற்று தியாகம் செய்யுங்கள்.
- இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இது பல இனக்குழுக்களின் தேசம். அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வ குடியான தமிழர்களே கொண்டாட முடியும்.
Ambedkar Jayanti Quotes
- சாதி எனும் கீழ்த்தனத்தினால் தான் பெரும்பாலான மக்கள் மனிதத்தன்மை இல்லாமல் வாழ்கிறார்கள்.
- நான் இந்துவாகப் பிறந்தாலும், நான் இந்துவாக சாகமாட்டேன் என்று உறுதியாகக் கூறுகிறேன்
- வாழ்க்கை நீண்டதாக இருப்பதை விட சிறப்பாக இருக்க வேண்டும்.”
- அலட்சியம் என்பது மக்களை பாதிக்கக்கூடிய மிக மோசமான நோயாகும்.”
இப்பதிவில் நாம் அம்பேத்கரின் முக்கிய மற்றும் பிரபலமான மேற்க்கோள்கள் பற்றி பார்த்துள்ளோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இதையும் படியுங்கள்: Pocso Act in Tamil: போக்சோ சட்டம் என்ன சொல்கிறது..! முழு விவரம் இதோ..! |
அம்பேத்கர் மேற்கோள்கள் – FAQ
1. அப்பேத்கர் பிறந்த வருடம்?
1981-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ஆம் அப்பேத்கர் பிறந்தார்.
2. அப்பேத்கரின் இயற்பெயர் என்ன?
பீமாராவ் ராம்ஜி
3. அப்பேத்கர் பிறந்த ஊர் எது?
மத்திய பிரதேசத்தில் உள்ள மாவு என்னும் ஊரில் அம்பேத்கர் பிறந்தார்.