இந்த நவீன காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இதுவரை சாத்தியமா என்று எண்ணிய பல விஷயங்கள் சாத்தியமாகி வருகிறது. அந்த வரிசையில் தான் தற்போது அமெரிக்க அரசு ஒரு புதிய திட்டதை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் படி நிலவில் ரயில் போக்குவரத்து (Train Transport on Moon) உருவாக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் படி அமெரிக்கா நிலவில் ரயில் போக்குவரத்து (Rail Transport on Moon) அமைப்பை உருவாக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தையும் செய்துள்ளது. அமெரிக்காவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு தான் இந்த DARPA.
இந்த அமைப்பின் விரிவாக்கம் பாதுகாப்பு மேம்பட்ட ஆராய்ச்சி திட்ட முகமை ஆகும். மேலும் இதற்கு முன்னர் அமெரிக்கா அப்பல்லோ திட்டத்தின் மூலம் மனிதரை நிலவுக்கு கொண்டு செல்ல உதவிய பல தொழில்நுட்பங்களின் உந்து சக்தியாக இந்த DARPA அமைப்பு தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் தற்போது இந்த அமைப்பு தற்போது அடுத்த முயற்ச்சியாக நிலவில் ரயில் போக்குவரத்து அமைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. மேலும் இந்த அமைப்பு நார்த்ரோப் க்ரம்மன் எனும் நிறுவனத்துடன் நிலவில் ரயில் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு கருத்தை உருவாக்குவதற்கும், அதை முன்னெடுத்து செல்லவும் DARPA அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும் இத்திட்டத்தின் மூலமாக மனிதர்கள், பொருட்கள் போன்றவற்றை சந்திரனின் மேற்பரப்பில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லலாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. அதுமட்டுமின்றி வளர்ந்து வரும் அமெரிக்காவின் விண்வெளி பொருளாதாரத்திற்கு பங்களிக்க முடியும். இதற்காக நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் புதிய ஆய்வையும் மேற்கொள்கிறது.
முதலில் நிலவில் ரயில் அமைப்பு உருவாக்க தேவைப்படும் இடைமுகங்கள் மற்றும் வளங்களை வரையறுக்க வேண்டும். பின்னர், அது எதிர்பார்க்கக்கூடிய செலவு, தொழில்நுட்ப மற்றும் தளவாட அபாயங்களின் பட்டியலையும் அந்நிறுவனம் தயார் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.80 லட்சம் அபராதம்..! என்ன நடந்தது? |