பிரபல தனியார் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவும் நிகழ்ச்சி தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கோபி. இவரை நீயா நானா என்ற கோபிநாத் (Neeya Naana Gopinath) என்று கூறினால் தான் அனைவருக்கும் தெரியும். இந்த நிகழ்ச்சி அனைவரும் பிடித்த நிகழ்ச்சியாக தற்போது உள்ளது. இதில் அவ்வபோது நடக்கும் சில சுவராஸ்யமான நிகழ்வுகள் சமூக வலைதளங்ளில் டிரெண்ட் ஆவதும் வழக்கம் தான்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதிக்கான எபிசோட்டில் தத்துவப் பாடல் ரசிகர்களும், மறுபுறம் பாடகர்களும் கலந்துக்கொண்டு தங்களின் இனிமையான தருணங்களை பகிர்ந்துக்கொண்டும், அந்த பாடல்கள் அவர்களுக்கு எவ்வாறு மருந்தாக அமைந்தது என்பதையும சுவரஸ்யமாக விளக்கினார்கள்.
சில நேரங்களில் யாரிடமும் சொல்ல முடியாத நேரங்களில் கூட, அந்த ரகசியமான நேரங்களில் அவர்களுக்கு அருமருந்தாய் சில பாடல்கள் அமைந்திருக்கும். அதுபோல சில மகிழ்ச்சியான நேரங்களிலும் சில பாடல்கள் மருந்தாக அமைந்திருக்கும். அதை பற்றி தான் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி எபிசோட்டில் (Neeya Naana Latest Episode) விவாத நிகழ்வாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கான பிரோமோ வெளியானதும் நிகழ்ச்சி இப்படி தான் போக போகிறது என்ற அனைவரிடத்திலும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்தது. நீயா நானா நிகழ்ச்சியில் பல முறை தமிழ் சினிமா பாடல் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தாருலும், இந்த தத்துவ பாடல் எபிசோட் அனைவரையும் கவர்ந்தது என்றே கூறலாம்.
தத்துவப்பாடல்களில் கண்ணதாசன் போன்ற ஒரு கவிஞர் அந்த காலத்தில் கில்லியாக இருந்தாலும், அவரை தொடர்ந்து வந்த வாலி, வைரமுத்து 80ஸ், 90ஸ் கிட்ஸ்க்கும் 2கே கிட்ஸ்க்கு கவிஞர் நா.முத்துக்குமார் போன்ற கவிஞர்கள் அவர்களின் தத்துவப்பாடல்களால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்தார்கள் என்று தான் கூற வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் நிழல்கள் திரைப்படத்தில் இருந்து இது ஒரு பொன் மாலை பொழுது என்ற அந்த பாடல் வரிகளை பாடகர்கள் பாடிய போது கோபிநாத் தன்னுடைய நினைவலைகளையும் பகிர்ந்துக்கொண்டார். அது அனைவராலும் ரசிக்கும்படியாக இருந்தது. அவர் கூறும் போது கே.கே நகரில் 13 கிலோ துணி மூட்டையை நான் தூக்கி கொண்டு திரிந்த போது எனக்கு உத்வேகம் கொடுத்தது இந்த பாடல் தான் என்று கூறு கண்கலங்கினார்.
எத்தனையோ நிகழ்ச்சிகளை நீயா நானா கோபிநாத் தொகுத்து வழங்கிருந்தாலும், இந்த எபிசோட் அவர் மிகவும் உணர்ச்சி வசமாக தான் நடத்தினார் என்று தான் கூறவேண்டும். எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்திருந்தாலும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஒரு தனி இடத்தை கொடுத்தது என்றே கூறலாம்.