தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடிக்கும். காமெடியனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று நடிகராக வளர்ந்துள்ளார்.
அந்த வகையில் நடிகர் கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். அதிலும் குறிப்பாக இளம் நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் (sk 21 movie release date) உருவாகி வரும் படம் தான் அமரன்.
இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சிவகாரத்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜீவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் தொடங்கி நடைபெற்று முடிந்தது. அண்மையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இந்நிலையில் அமரன் படப்பிடிப்பிற்கான பட்ஜெட் மேலும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கூடுதலாக ரூ.25 கோடி அதிகமாக செலவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் 1 மாத காலம் படப்பிடிப்பு மீதமுள்ளதால் அதற்கும் கூடுதலாக ரூ.20 கோடி செலவாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனால் கமல் இயக்குனரை அழைத்து ஏற்கனவே குறித்த பட்ஜெட்டை தாண்டி அதிகமாக செலாவாகி உள்ளதால் விரைந்து படப்பிடிப்பை முடிக்குமாறு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமரன் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது (Amaran Movie Update in Tamil).
இந்நிலையில் மே மாதம் படம் ரிலீஸ் செய்யப்படுவதாக இருந்த நிலையில், வரும் ஜூலை மாதத்தில் படத்தை (Amaran Padam Release Date in Tamil) வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.