Homeசெய்திகள்நாம் யாருனு நம் செயல் முடிவு செய்யும்.. டிரைவரை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா...!

நாம் யாருனு நம் செயல் முடிவு செய்யும்.. டிரைவரை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா…!

நாடறிந்த தொழில் அதிபர் தான் ஆனந்த் மஹிந்திரா. இவர் வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கக் கூடியவர். இவ்வளவு உயரம் சென்றாலும் சிறிதும் பந்தா இல்லாமல் அனைவரையும் பாராட்டி நிறைய திறமையான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்தியாவில் பல்வோறு துறைகளிலும் இவரின் பங்களிப்பு தற்போது இருந்து வருகிறது. ஆனந்த் மஹிந்திரா குழுமங்களின் தலைவராக இருந்த போதும் சிறிதும் தலைக்கணம் இல்லாமல் வலைத்தளங்களில் எதார்த்தமான பதிவுகள் மூலம் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த மகிந்திரா தனது எக்ஸ் வலைதளத்தில் பல சுவாரசியமான தகவல்களை பதிவிட்டு, அவருக்கு பிடித்த தன்னமை கதைகள், சாதாரண குடும்பத்தில் பிறந்து சாதனை படைத்தவர்களின் தகவல்கள், திறமையான வீடியோக்கள், என அவருக்கு பிடித்த அனைத்தையும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் திங்கள் கிழமைகளில் அவர் பதிவிடும் MondayMotivation என்ற பெயரில் இவர் பதிவிடும் (Anand Mahindra for Monday Motivation) நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இவர் பதிவிட்ட அடுத்த நொடியே இவரின் பதிவிற்கு அதிக கமெண்ட்ஸ்களும், லைக்ஸ்களையும் அள்ளும். அந்த வகையில் கடந்த திங்ட்கிழமை மோட்டிவோசன் பதிவாக அவர் பதிவிட்டிருந்ததாவது , அதவாது ஒரு லாரி டிரைவர் ஒருவர் தன்னுடைய பயணத்திற்கும் நடுவே வீடியோக்களை பதிவு செய்து அதனை யூடியூபில் பதிவிட்டு அதன் மூலம் வருவாய் பெறுவது குறித்து ஆனந்த் மகேந்திரா அவரின் எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது (Anand Mahindra Tweet on Truck Driver) ராஜேஷ் ரவானி என்பவர் 25 ஆண்டுகளாக லாரி ஓட்டி வருகிறார். அவர் டிரைவிங் மட்டும் பார்க்காமல் தற்போது ஃபுட் மற்றும் டிராவல் குறித்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதன் மூலம் யூடியூப்பில் செலிபிரிட்டியாக அவர் மாறியுள்ளார். அவருக்கு 1.5 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த டிரைவர் தனது வருமானம் மூலம் தற்போது ஒரு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் நாம் என்ன தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல புதிய தொழில் நுட்பத்தை நாம் கையில் எடுத்தாலும் நம்மை புதுப்பித்துக்கொள்ள முடியும் எனவும் அதற்கு இவர் உதாரணமாக உள்ளார் என்றும் ராஜேஷ் ராவனியின் வீடியோ ஒன்றையும் ஆனந்த மகிந்திரா பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: தனியா நின்னா ஒரு குத்தமாய்யா.. மைக் சின்னத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular