உலக பணக்காரர்களில் ஒருவர் தான் முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் இருக்கிறார். முதல் மகன் மற்றும் மகளுக்கு திருமணமான நிலையில் தற்போது இளைய மகனான ஆனந்த் அம்பானி மற்றும்ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் (Ambani Son Anant Ambani Marriage) வரும் ஜூலை மாதம் 12-ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரை பற்றி தெரிந்துக்கொள்வதற்காகவும், அவர்களின் திருமண ஏற்பாடுகள் குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்வதற்காகவும் மக்கள் அதிகளவு கடந்த சில நாட்களாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஆனந்த் அம்பானி மற்றம் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் சொத்து (Anant Ambani Radhika Merchant net worth) விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராதிகா மெர்ச்சன்ட்
வீரேன் மெர்ச்ன்ட் ஒரு முன்னணி மருந்து நிறுவனமான Encore Healthcare-யின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ.2000 கோடி ஆகும். நாட்டின் பணக்கார தொழில் அதிபர்களில் இவரும் ஒருவராவார்.
ராதிகா மெர்ச்சன்ட் நியூயாக்கில் உள்ள பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். தற்போது இவர் Encore Healthcare நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார். இவருடைய தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் ரூ.10 கோடி ஆகும்.
ஆனந்த் அம்பானி
நாட்டின் பெரும் பணக்கார்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளார். ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி ஆகியோர் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுவில் நியமிக்கப்பட்டனர்.
தற்போது ஆனந்த் அம்பானியின் தோராயமாக ரூ. 3,31,518 கோடி ஆகும்.