சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் கதாநாயகன் தான் விராட். இவர் தற்போது அந்த சீரியலில் விராட் (Anbe Vaa Virat Marriage) என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் மற்றும் இவரின் நீண்ட நாள் காதலி நவீனாவை தற்போது திருமணம் செய்துள்ளார். இவரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
விராட் திருமணம் செய்துக்கொண்ட பெண் மேக்கப் ஆர்டிஸ்ட். இவர் இவருக்கு முன்னதாகவே திருணம் செய்துக்கொண்டு 15 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சீரியல் நடிகர் நவீனாவை திருமணம் செய்துக்கொண்டது தற்போது பேசு பொருளாகி உள்ளது.
இது குறித்து நவீனா பேசுகையில் எனக்கு 18 வயதில் திருமணம் நடந்தது. எனக்கு கவிநயா என்ற பெண் குழந்தையும் இருக்கிறாள். ஆனால் என்னுடைய முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையாததால் நான் விவாகரத்து பெற்று தனியாக என் குழந்தையை வளர்த்து வந்தேன் என்று கூறினார். இந்நிலையில் நவீனாவும், வமுதலில் நண்பர்களாக இருந்து, பிறகு திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார்கள்.
தொடர்ந்து பேசிய நவீனா, நான் ஒருவரை அவ்வளவு ஈஸியா நம்ப மாட்டேன். ஏனென்றால் என் முதல் திருமண வாழ்க்கையில் நான் பல ஏமாற்றங்களை சந்தித்துள்ளேன். ஏமாற்றங்கள் மட்டும் தான் என் வாழ்க்கையில் இருந்துள்ளது. முதலில் விராட் அவரின் அம்மாவிடம் எங்களின் காதலை சொல்லும் வரை எனக்கு விராட் மீது முழு நம்பிக்கை இல்லை என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய விராட், விவாகரத்தான பெண்ணை திருமணம் (Viraat Naveena Marriage) செய்துக்கொண்டால் என்ன தவறு இருக்கிறது. அவர்களை திருமணம் செய்துக்கொண்டால் நம்முடைய வாழ்க்கை நல்லா இருக்குமா என்று நமக்கு தெரிந்தால் போதுமானது, மற்ற எதையும் நாம் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.
நவீனா பேசுகையில், எங்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது என தெரிந்ததும், நான் 20 கிலோ வரை என் உடல் எடையை குறைத்தேன். ஆனால் அதற்கு விராட் எனக்காக உன் எடையை குறைக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். ஆனால் நான் மற்றவர்களின் பேச்சு நாம் இடம் கொடுக்க வேண்டாம் என்று உடல் எடை குறைத்தேன் என்றார். மேலும் இந்த உடல் எடை எனக்கு நான் அதிகமாக சாப்பிட்டதால் ஏற்பட்டது அல்ல, கொரோனா காலத்தில் என்னுடைய அப்பா தவறிவிட்டார். எனக்கு என் அப்பா என்றால் மிகவும் பிடிக்கும். அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் மிகவும் ஸ்ட்ரெஸ் ஆனேன். அதுக்காக ஸ்டீராய்டு எடுத்துக்கிட்டேன். அதனால் தான் எனக்கு உடல் எடை கூடிவிட்டது என்று மிகவும் எமோஷனலாக கூறினார்.