Homeசினிமாமுடிவுக்கு வரும்னு தெரியும்..! ஆனால் மனசு வருத்தமா இருக்கு..! நடிகை மகாலட்சுமி..!

முடிவுக்கு வரும்னு தெரியும்..! ஆனால் மனசு வருத்தமா இருக்கு..! நடிகை மகாலட்சுமி..!

90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த தொகுப்பாளராக இருந்தவர் தான் (VJ Mahalakshmi) விஜே மகாலெட்சுமி. இவர் பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்திலும், சில சீரியல்களில் வில்லியாகவும் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்துக்காெண்டார். இவர்களின் திருமணம் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை பெற்று வந்தது. அப்போது ட்ரெண்டிங் கப்பலாக வலம் வந்தவர்கள் தான் மகாலெட்சுமி மற்றும் ரவீந்தர்

இவர்களின் திருமணம் குறித்த மீம்ஸ்கள் அதிகளவு பகிரப்பட்டு வந்தன அதிலும் ரவீந்தருக்கும் இப்படி மனைவி அமையும் போது நிச்சயம் நமக்கும் திருமணம் நடக்கும் என்று மீம்ஸ்கள் வெளிவந்தன. நடிகை மகாலெட்சுமி திருமணம் (Serial Actress Mahalakshmi Ravinder) ஆனதில் இருந்து தனது கணவருடன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

ஆனால் இரவீந்தர் சோகமான பதிவுகளை சில தினங்களாக பதிவிட்டு வருகிறார். இதனால் நெட்டிசன்கள் உங்களுக்கும், மகாலெட்சுமிக்கும் விவாகரத்து நடக்க போகிறதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அதற்கு பதிலளித்த ரவீந்தர் என்னை அவளை தவிர வேறு யாராலும் புரிந்துக்கொள்ள முடியாது. எனக்கு இந்த ஜென்மத்தில் அவள் தான் என்று பதிலளித்துள்ளார்.

நடிகை மகாலெட்சுமி சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் இவர் வாசுகி என்ற கேரட்டரில் நடித்து வருகிறார். இன்னும் சில நாட்களில் அன்பே வா சீரியல் முடிவடைய உள்ள நிலையில், இது குறித்து தனது கடைசி நாளான அன்பே வா சீரியல் சூட்டிங்கில் மகாலெட்சுமி (Anbe Vaa serial actress mahalakshmi) வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் இந்த சீரியல் முடிவடைய போகிறது என்பது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. ஒரு நாள் சீரியல் முடிவுக்கு வரும் என்பது தெரியும். ஆனால் இந்த சீரியல் முடிவடைவது மிகவும் வருத்தமாக உள்ளது. நான் இந்த சீரியலுக்கு இடையில் தான் வந்தேன். ஆனாலும் 2 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து கொண்டிருக்கிறேன் என்றும் எனது கேரக்டர் இந்த சீரியலில் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

VJ Mahalakshmi
மேலும் படிக்க: நான் யாரையும் அவ்வளவு ஈஸியா நம்ப மாட்டேன்..! விராட்- நவீனா எமோஷல்..!

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular