தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான பாடங்கள் முடிக்கப்பட்டு விட்டன. பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் நடந்து முடிந்து விட்டது. தற்போது கோடைகால விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்டு விட்டன. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரும் கல்வி ஆண்டு தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடித்தி வருகிறார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடித்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நடப்பாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் அனைத்தும் முடிந்து விட்டன அவற்றின் முடிவுகள் எப்போது வெளியிடுவது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
கோடை வெப்பம் அதிகமாக இருப்பதாலும், மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 04 வெளியிடப்பட இருப்பதால் விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் எப்போது திறப்பது (TN School Reopen Date 2024) என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வரும் கல்வியாண்டில் பள்ளி கல்வித்துறையின் செயல்பாடுகள் மற்றும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை (School Education of Tamil Nadu) அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன், மாதிரி பள்ளிகள் இயக்குநர் சுதன், அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சேதுராம வர்மன் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க: விட்டாச்சு லீவு.. நாளை முதல் கோடை விடுமுறை அறிவிப்பு..! |