நாடு முழுவதும் நேற்று ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜுன் 1 தேதி முதல் மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் நேற்று ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 18-வது மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பொதுமக்கள் தங்களின் வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்தனர். முன்தாகவே 39-தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள், தமிழக முதல்வர், அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் ஆகியோர்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி வந்தனர்.
நேற்று தேர்தல் ஆணையர் அதிகாரி சத்ய பிரதா சாகு தமிழகத்தில் கடந்த மக்களை தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சற்றே குறைந்துள்ளது என தகவல் தெரிவித்தார்.
மேலும் அதிகாரப்பூர வாக்குப்பதிவு சதவீதத்தை இன்று (ஏப்ரல் 20) காலை 11 மணியளவில் வெளியிடப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் போட்டியிட்ட அந்தந்த கட்சி வேட்பாளர்கள் வாக்கு செலுத்திய நிலையில், பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை நேற்று அவரின் வாக்கை (Annamalai cast vote) ஊத்துப்பட்டியில் செலுத்தினார்.
பிறகு செய்தியாளர்களை (Annamalai Peti) சந்தித்த அவர் தமிழகத்தில் பாஜக நேர்மையான முறையில் தான் தேர்தலை சந்தித்துள்ளது என தெரிவித்தார். தேர்தலில் பாஜகாவிற்கு வாக்களிப்பதற்கு நாங்கள் எந்த வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். கோவையில் தேர்தல் மிகவும் நேர்மையான முறையில் நடந்துள்ளதாகவும், அங்கு வாக்களிப்பதற்காக அவர்களுக்கு பணம் வழங்கவில்லை எனவும் தெரிவித்தார். ஒருவேளை பாஜக சார்ப்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது நிரூப்பிக்கப்பட்டால் தான் அரசியல் இருந்தே விலக தயார் என சவால் விடும் விதமாக பேசினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் பாஜக 39-தொகுதிகளிலும் வெல்லும் என்றும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
