தமிழகத்தில் வரும் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. எனவே, கடைசி நாளான இன்று தமிழக பாஜக தலைவர் இறுதி கட்ட பிரச்சாரத்தில் (Annamalai therthal pracharam) தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். கோவையில் பிரசாரத்தில் ஈடுப்பட்ட அண்ணாமலை, கோவை மக்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பெண்மணி நீட் தேர்வை ரத்து செய்வீர்களா என கேட்டார். அப்போது பேசிய அவர் எங்களுடைய உயிரே போனாலும், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என கூறினார்.
நீட் தேர்வு மக்களுக்கு நல்லது. ஏழை மக்கள் நீட் தேர்வு எழுதி மட்டுமே மருத்துவ கல்லூரிக்கு செல்ல முடியும். திமுக அரசு 1967-ல் இருந்து தமிழ்நாட்டிற்கு 5 மருத்துவக்கல்லூரிகளும், 17 தனியார் மருத்துக்கல்லூரியும் தான். ஆனால், நாங்கள் 15 அரசு மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்துள்ளோம். நீட் தேர்வு மூலமா ஏழை மக்கள் சமூக நீதியோடு தான் மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண்டும். கிராமப்புறத்தில் ஒரு ஏழைத்தாயின் குழந்தை நீட் முலமாக மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்று படிக்க முடியும். அப்படி இல்லையென்றால் டி ஆர் பாலுனுடைய மருத்துவக் கல்லூரி, பாலஜி மெடிக்கல் காலேஜ் அவர்களுடைய கல்லூரியில் கோடி கோடியாக பணம் கொடுத்து எத்தனை பேரால் படிக்க முடியும். பணம் உள்ளவர்கள் படிப்பார்கள் பணம் இல்லாத ஒரு ஏழை தாயின் குழந்தை எப்படி படிக்கும்.
(Annamalai Election Campaign in Covai) நீட்டை ரத்து செய்தால் மட்டும் தான் அரசியலில் இருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு அரசியலே வேண்டாம். எந்த காரணத்திற்காகவும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள். மாணவர்கள் இறப்பதற்கு ஸ்டாலின் ஐயாவை உள்ளோ வைத்தால் எந்த தற்கொலையும் நடைபெறாது. நான் மட்டும் தமிழக காவல்துறையில் இருந்தேன் என்றால் உடனடியாக ஒரு FIR போட்டு முதல் குற்றவாளியாக அவரை இன்னேரம் உள்ளே தள்ளி இருப்பேன் என்று அண்ணாமலை கூறினார். இன்றுடன் தேர்தல் பிரசாரம் (Annamalai election campaign) முடிவடைந்த நிலையில் இவர் இதுபோன்ற கருத்துக்களை பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.