தமிழக சட்டசபையில் பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நேற்று (19.02.2024) அன்று தமிழகத்தின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று தமிழகத்தின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் (MRK Panneerselvam) தாக்கல் செய்தார் இந்த பட்ஜெட்டில் பல முக்கிய திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகின.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் முக்கிய அம்சமாக இளைஞர்களுக்கு 1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த திட்டம் (Ilaignargalukku Maniyam) குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த திட்டமானது பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்கும் முயற்சியின் முதல் படியாக பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பட்டதாரி இளைஞர்களுக்கு ரூபாய் 1 லட்சம் மானியம் (Ilaignargalukku 1 Lakh Maniyam) வழங்குவதற்காக ரூ.1 கோடி இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதி அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது திட்டம் பற்றி பட்ஜெட் தாக்கல் உரையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, வேளாண் தொழிலை மேற்கொள்ள இளைஞர்களிடம் ஆர்வம் ஏற்படுத்துவது மிகவும் அவசியம். இளைஞர்கள்தான் எந்த ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் முதுகெலும்பாவர். வேளாண் சார்ந்த தொழில்களின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது இதன் காரணமாக 2021-2022-ஆம் ஆண்டு முதல் 268 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வேளாண் சார்ந்த தொழில்களைத் தொடங்கி நடத்தி வேளாண்மைக்கு வலுசேர்த்து வருகின்றனர் என்று அவர் தன் உரையில் கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திட நம்முடைய அரசு பல விதமான முயற்சிகளையும் எடுத்து தான் வருகிறது என்றும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் குறைந்தபட்ச விலைக்குமேல் சில ரகங்களுக்கு ஊக்கத் தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். மேலும் கடந்த ஆண்டில் 45 இலட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வேளாண் தொழில் தொடங்ம் பட்டாதாரி இளைஞர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் இந்த மானியதொகை வழங்கப்பவுள்ளதாகவும் குறிபிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: நான்காவது முறையாக தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்..! |