Homeசெய்திகள்விவசாயிகள் மீது மீண்டும் தாக்குதல்..! நடந்தது என்ன?

விவசாயிகள் மீது மீண்டும் தாக்குதல்..! நடந்தது என்ன?

கடந்த வாரத்தில் விவசாயிகள் பலர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லிக்கு பேரணியாக சென்றனர். இதனை தடுக்கும் விதமாக அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது போன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதனை எதிர்த்து கடந்த 16-ம் தேதி நாடு முழுவதும் பாரத் பந்த் நடைபெற்றது.

விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ம் தேதி போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர். மேலும் கடந்த 12-ம் தேதி இரண்டு மத்திய அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி செல்லத் தொடங்கினர். இந்த பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தான் இன்று தலைநகர் டெல்லியை விவசாயிகள் முற்றுகையிட முயற்சி செய்தனர். நுழைவாயிலில் தடுக்க போலீஸ் முயலும் என்பதை முன்கூட்டியே அறிந்து, முக்கிய நுழைவாயில்களை தவிர்த்துவிட்டு தொலைவில் மற்றும் சாலை வசதிகள் முறையாக இல்லாத இடங்கள் மூலம் டெல்லியை முற்றுகையிட முயற்சிசெய்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக காவல் துறை மற்றும் ராணுவ அதிகாரிகள் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசி தாக்குதல் (Another Attack on Farmers) நடத்தினர். இதன் காரணமாக டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதனை மீறி முன்னேறி சென்ற விவசாயிகளை காவல் துறை மற்றும் ராணுவ அதிகாரிகர் தாக்கினர். இது குறித்த புகைப்படங்கள் (Farmers Attack in Delhi) சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: சமூக வலைதள கணக்குகள் முடக்கம்..! அரசின் புதிய நடவடிக்கை..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular