Homeசினிமாதனுஷ் பட நடிகையுடன் இணையும் துருவ் விக்ரம்..! வெளியான முக்கிய அப்டேட்..!

தனுஷ் பட நடிகையுடன் இணையும் துருவ் விக்ரம்..! வெளியான முக்கிய அப்டேட்..!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இவர் சில திரைப்படங்களில் மட்டும் தான் நடித்துள்ளார். எனினும் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக மாறிவிட்டார். இவரது நடிப்பு இளம் தலைமுறையினர் முதல் அனைவருக்கும் பிடித்த விதத்தில் இருக்கிறது.

இவர் இறுதியாக நடித்த மகான் திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் அவர் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பிறகு அவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் தான் தற்போது புதிய படத்தில் (Dhruv Vikram Next Movie) நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார். இப்படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக அவர் கபடி பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

இந்நிலையில் தான் தற்போது இப்படத்தின் (Dhruv Vikram Next Film) படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் தனது கடந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு தற்போது இந்த படத்தினை இயக்க தொடங்கவுள்ளார். எனவே இப்படத்தின் கதாநாயகி (Dhruv Vikram Next Movie Heroine) குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Dhruv Vikram Next Movie Heroine

இந்த அறிவிப்பின்படி தற்போது இப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran) கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற திரைபடமான சைரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தான் தற்போது இந்த படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இதையும் படியுங்கள்: 800 கோடி சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குனர்..! யார் தெரியுமா?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular