மெஹந்தி டிசைன்களில் அனைவரும் விரும்பி தேர்வு செய்வது இந்த அரபிக் மெஹந்தி டிசைன். அரபு நாடுகளில் பிரபலமாக இருந்த இந்த அரபிக் மெஹந்தி டிசைன் காலப்போக்கில் மெஹந்தி பிரியர்களினால் உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது.
இந்த Arabic Mehndi Design சிக்கலான, அதே சமயம் எளிமையாகவும் (Simple Arabic Mehndi Design) வரைய முடியும். இந்த வகையான அரபிக் மெஹந்தி டிசைன்களில் பூக்கள், இலைகள், சமச்சீர் கோடுகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வரையப்படுகிறது.
நாம் இந்த பதிவில் Simple Arabic Mehndi Design in Tamil, அரபிக் மெஹந்தியில் உள்ள வகைகள் மற்றும் அழகான அரபிக் படங்களை Arabic Mehndi Design HD Images பதிவிட்டுள்ளோம்.
பாரம்பரிய மலர் வடிவங்கள் (Arabic Floral Mehndi Design)
இந்த வகையான வடிவமைப்பு அல்லி மலர், மல்லிகை மலர் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு வரையப்படுகிறது. இந்த வகையான அரபிக் மெஹந்தி டிசைன்கள் மணமகள் அதிகமாக விரும்பி வரைந்துக்கொள்வார்கள். இது அழகு, தூய்மை, அன்பை குறிக்கிறது.
அரபு வளைகுடா மெஹந்தி டிசைன் (Gulf Style Mehndi Design)
இந்த வகையான டிசைன்கள் வளைகுடா பிராந்தியத்தின் மெஹந்தி மரபுகளை பிரதிபலிக்கிறது. இந்த Gulf Style Mehndi Design மெஹந்தி டிசைன்கள் பெரிய மலர்கள், தடித்த கோடுகள் கொண்டு வரையப்படுகிறது. பெரும்பாலும் இந்த வகையான டிசைன்கள் கால்களில் வரையப்படுகிறது.
மாங்காய் வடிவ வடிவமைப்பு (Mango Mehndi Design)
இந்த Mango Mehndi Design பெரும்பாலும் அனைவராலும் எளிதாக வரையக் கூடிய ஒரு மெஹந்தி டிசைன் ஆகும். மெஹந்தி வரைய கற்றுக்கொள்பவர்கள் முதலில் இந்த வடிவமைப்பை வைத்து தான் மெஹந்தி வரைய கற்றுக்கொள்வார்கள்.
இந்த வகையான வடிவமைப்பு மிகவும் அழகாகவும், அதே நேரத்தில் எளிமையாகவும் (Easy Arabic Mehndi Design) இருக்கும்.
மேலும் படிக்க: லேட்டஸ்ட் மெஹந்தி டிசைன்..! |
அரபிக் மெஹந்தி டிசைன் – FAQ
1. மெஹந்தியில் எத்தனை வடிவங்கள் உள்ளன?
நாம் வரையக் கூடிய மெஹந்தி டிசைன்களில் Different Types Of Mehndi Design உள்ளன. தடித்த, மலர் போன்ற 11 வகையான வடிவங்கள் உள்ளன. இதில் அனைவரும் அரபிக் மெஹந்தியை விரும்புவார்கள்.
2. மெஹந்தி வடிவங்களுக்கு அர்த்தங்கள் உள்ளதா? Do Mehndi Designs Have Meanings?
மெஹந்தி டிசைன்களின் வடிவங்கள் ஒவ்வொரு கலாச்சாரம் மற்றும் பிராந்தியம் (Region) ஆகியவற்றை பொறுத்து வேறுபடும்.
3. மெஹந்தி உலர எவ்வளவு நேரம் ஆகும்?
மெஹந்தி உலர குறைந்தது 30 நிமிடங்கள் ஆகும்.
4. மெஹந்தியின் மொழி என்ன?
ஹெந்திகா என்ற சம்ஸ்கிருத சொல்லில் இருந்து மெஹந்தி என்ற சொல் பெறப்பட்டது.